பக்கம்:இலக்கியச் சாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

வ.சுப. மாணிக்கனார்



வெண்மை களைக’ என்று வழிகாட்டுவர் வ.உ.சி.; அத்தகு நூல்களுள் தலையாது வள்ளலார் போற்றிய திருவாசகம்.

திருவாசக வாழ்வு

திருவாசகச் சாணையில் நம் அறிவைத் தீட்டினால் என்ன பிறக்கும்? எக்காலத்தில் எதனை எதனை விட வேண்டும், எக்காலத்தில் எதனை எதனைக் கொள்ள வேண்டும் என்கிற காலப்பக்குவம் நம் மனத்தில் விளையும். பலர் தவறாக எண்ணுவது போலத் திருவாசகம் உலக நல்வாழ்வை வெறுக்கும் நூலன்று குடும்பம் இன்பம் செல்வம் கல்வி புகழ் என்ற வாழ்வுப் பாங்குகளையெல்லாம் பழிக்கும் நூலன்று; உலகத்தை விட்டு ஒழிக. என்று துரத்தும் நூலன்று. அது பொருளாயின், திருவெம்பாவை திருவம்மானை திருப்பொற்சுண்ணம் முதலான பதிகங்களுக்கு இடம் எங்கே?

உன்னடியார் தாள்பணிவோம்

ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து சொன்ன பரிசே - தொழும்பாய்ப் பணிசெய்வோம் என்ற இல்லற வேண்டுதலுக்கு இடம் எங்கே? தில்லைச் சிற்றம்பலவன், பெண்பால் உகந்து குடும்பியாக விளங்கிக் காட்டுகின்றான் என்ற திருச்சாழல் நோக்குக்கு இடம் எங்கே? ஆதலின் திருவாசகம் திருமண வாசகத்திற்கு எதிரன்று: உடன்பாடு என்று அறையினும் மிகையன்று. - வைத்தநிதி பெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும் பித்த வுலகில் பிறப்போடிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்று தாய் கோத்தும்பி; உற்றாரை யான்வேண்டேன் -

ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் : * * ,

கற்பனவும் இனியமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/84&oldid=551082" இலிருந்து மீள்விக்கப்பட்டது