பக்கம்:இலக்கியச் சாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

83



குற்றாலத் தமர்ந்துறையும்

கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக்

கசிந்துருக வேண்டுவனே.

இத்தகைய துறவுக் கருத்துக்கள், திருவாசகத்தில் வழிந்தோடுகின்றன என்பதை நானும் அறிவேன்; யாவரும் உணர்வர். நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியில் இவை மிகவும் வெளிப்படை ஆனால், இவ்விடத்துத்தான் சில அடிப்படை உலகியலை நாம் சிந்திக்க வேண்டும். உயிர்ப்பக்குவம்

ஐம்பது வயதில் ஒருவன் மரப்பாவை வைத்துப் பருமன் ஊதி விளையாடலாமா? சிறு தேர் உருட்டி வீதியில் திரியலாமா? வயதுக் கிழவி சிற்றாடை கட்டிச் சதங்கை யொலிக்க நடை பழகலாமா? கல்லூரிக்குச் சென்றவன், உயர்நிலைப் பள்ளி நூல்களையும் பழக்கங்களையும் விட்டுவிடுகின்றான். உயர்நிலைப் பள்ளி மாணவன், தொடக்கப் பள்ளிப்பழக்க வழக்கங்களை விட்டுவிடுகின்றான். தாயானவள் கன்னித் தன்மைகளையும், பாட்டியானவள், அன்னைத் தன்மைகளையும் குறைத்துக் கொண்டு பருவத்திற்கேற்ற நடைமுறைகளைக் கொள்ப. ஆசிரியனானவன், மாணவக் குறும்புகளைக் குறைத்துக் கொள்கின்றான். படையிற்சேர்ந்த மறவன், வீட்டினை மறக்கப் பழகிக் கொள்கின்றான். வணிகன் தன்கடையில் ஒன்றினைத் தன் வீட்டிற்கு எடுத்தாலும் எழுதிக்கொள்கின்றான். உலகியலிற் பருவத்துக்கு ஏற்பவும் நிலைக்கு ஏற்பவும், கழிவன கழித்துக் கொள்வன கொள்ள வேண்டும். இவ்வாற்றால் கழிப்பவை வேண்டாதன என்றோ, வெறுக்கத் தக்கன என்றோ பொருளல்ல. விட வேண்டிய காலத்து விட வேண்டியவற்றை விட வேண்டும். பிச்சைக்காரன் போலவும் குப்பைக்காரன் போலவும் எல்லாவற்றையும் விடாது சுமந்து கொண்டு திரியக் கூடாது. உலகியலில் நுகர்பொருள்களைக் காலக் கழிப்புச் செய்து கொண்டு வருவதுபோல, உள்ளத்தின் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் ஒவ்வொரு காலத்திலும் விட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/85&oldid=551083" இலிருந்து மீள்விக்கப்பட்டது