பக்கம்:இலக்கியச் சாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வ.சுப. மாணிக்கனார்



குறைத்தும் அடக்கியும், மேன்மேல் உயர்ந்தவை புகவும் வளரவும் இடங்கொடுக்க வேண்டும். திருவாசகம் கூறும் வேண்டாமைப் பாடல்களை, வெறுப்புப் பாடல்களாகக் கருதாமல், அவ்வக்காலத்து இன்னின்னவற்றை விட்டொழிக்க வேண்டும் என்று, படிமுறை காட்டும் வாழ்க்கை வழிநடைக் கல்வியாகக் கருத வேண்டும். இதுவே உலகியலுக்கும் உளவியலுக்கும் ஒத்தது.

வாழ்வின் ஓட்டத்தில் எண்ணிப் பார்த்தால் நாம் நம்மையறியாமலே எவ்வெவற்றையோ விட்டுச் செல்கின்றோம். பலர் விட்டுச் செல்லவும் காண்கின்றோம். இவற்றை நினைவுபடுத்துவதுதான் திருவாசகம். திருவாசக நினைப்பு மேன்மேலும் நம் உள்ளத்து வளர்ந்தால், விடாது வைத்துக்கொண்டிருப்பவற்றை உரிய உரிய காலத்தில் விட்டு விட்டு உயர்ந்த உயிர்ப்பக்குவம் பெறுவோம். இம்மைப் பெருவாழ்வுக்கே திருவாசக நினைப்பு எல்லோர்க்கும் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/86&oldid=551084" இலிருந்து மீள்விக்கப்பட்டது