பக்கம்:இலக்கியச் சாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவாசகமும் பண்டிதமணியும்

இருபதாம் நூற்றாண்டில் எழுந்த உரை வரலாற்றில் என் ஆசிரியர் மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசனார் எழுதிய திருவாசகக் கதிர்மணி விளக்கம் என்ற பேருரை செந்தமிழுக்கு உறுதியான செல்வமாகும். நுண்மையால் ஒண்மையால் நடைநயத்தால் நடைத்துய்மையால் உரைநடை யாளர்க்கெல்லாம் இவ்வுரை வழிகாட்டி மாதவச்சிவஞான முனிவர்க்குப் பின்னர், சைவ மெய்யியலை நன்னடையில் புலப்படுத்தும் சொல்வளம் மிக்க பேருரை இது. நூலின் நோக்கம், இறையெளிமை, அடியவர்பணி, பன்னூற்கலைகள், பல்துறைச் சான்றுகள், இலக்கணவமைதிகள், ஒப்பாய்வு, வாழ்வறங்கள் என்ற கூறனைத்தும் தழுவிய பேருரை இது.

வையகம் போற்றுதிரு வாசகத்தின் உட்பொருளைக் கையிற் கனியாகக் காட்டினனால் - செய்யதமிழ்ப் பேரா சிரியர் பெருமான் கதிரேசன் ஆராய்ந்து முற்றும் அறிந்து என்பது கவிமணியின் பாராட்டு. பொது மரபு

திருவாசகத்தின் உட்பொருளைப் பலரும் எளிதிற் புரிந்து கொள்ளும் வண்ணம் பண்டிதமணியார் கையாண்ட ஒருமுறை உலகியல் விளக்கமாகும். திருவாசகம் இறைநூலாதலின் தோத்திரங்கள் சாத்திரங்கள் காட்டி விளக்குவதே சிறப்பு மரபு. எனினும் திருவாசகவமைப்புக்கள் திருப்பொற்சுண்ணம், திருவெம்பாவை, திருவுந்தியார், திருவம்மானை, திருப்பள்ளியெழுச்சி, திருச்சாழல்,

தில்லைக்குடமுழுக்கு விழாமலர்-11-2-1987

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/87&oldid=551085" இலிருந்து மீள்விக்கப்பட்டது