பக்கம்:இலக்கியச் சாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

வ.சுப. மாணிக்கனார்



நிழற்படுகின்றன. உணர்ச்சித் தளங்கள் மாறுவதில்லை; நோக்கங்களே மாறுகின்றன. இதுவே உலகியலுக்கும் இறையியலுக்கும் உரிய வேறுபாடு. இதனை வேறுபாடு என்று சொல்வதைவிட குழவி இளமை முதுமை போன்ற ஒர் உயர் வளர்ச்சியாக இறைமையைக் கருதுவதே படிமுறையாகும்.

“பொருள் புலப்பாட்டிற்காகவும் தெளிவுக்காகவும் அன்றாட உலகியலில் காணப்படும் வழக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு பண்டிதமணியிடம் சிறப்பாகக் காணப்படுகின்றது. இப்போக்கு அவரது சமயக் கட்டுரைகளிலும் திருவாசக உரை விளக்கங்களிலும் மிகுதியாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்”

என்ற சிறப்புநிலை சுட்டுவர் “பண்டிதமணி நடைநயம்” என்ற நூலாசிரியர் அறிஞர் இரா.மோகன். பழுத்த இலக்கியச் சுவையும் பரந்த உலகியலறிவும் எனப்பாடினார் முத்தமிழ்மணி அருணாசலம்பிள்ளை. அத்தகைய உலகியல் ஒழுக்கங்கள் சிலவற்றைச் சோற்றுப்பதம் உப்புப்பதம் போலக் காண்போம்.

திருச்சதகத்தில்

கிற்ற வாமன மேகெடு வாயுடை
யானடி நாயேனை
விற்றெ லாமிக ஆள்வதற் குரியவன்
விரைமலர்த் திருப்பாத
முற்றி லாவிளந் தளிர்பிரிந் திருந்துநீ
உண்டன எல்லாமுன்
அற்ற வாறுநின் அறிவுநின் பெருமையும்
அளவறுக் கில்லேனே

என்ற திருச்சதகம் (34) இறைவன் உரிமையையும் நெஞ்சின் சிறுமையையும் சுட்டுகின்றது.நான்கு உலகியல்களைக் காட்டி இச்சதகக் கருத்தை விளக்குவர் பண்டிதமணியார்.

(அ) குற்றப்பட்ட ஒருவனைக் கண்டவாறு அவன் குற்றமெல்லாம் சொல்லிக்காட்டிக் கூப்பிடுவது அழகன்று. திருத்துவதற்குமுன் அன்பு தோன்ற அவனை அழைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/90&oldid=991647" இலிருந்து மீள்விக்கப்பட்டது