பக்கம்:இலக்கியச் சாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

வ.சுப. மாணிக்கனார்



என் நெஞ்சே, நீ உன்னை அரசனாகக் கருதிக் கொண்டு இறுமாந்து நடக்கலாமா? இறைவனது அடியை நீ வணங்காதிப்பது எவ்வளவு கேடு தெரியுமா? நின் அறிவும் நின் பெருமையும் அறுவறுக்கில்லேனே - உன் அறிவின் சிறப்பும் உன் பெருமையின் சிறப்பும் சிவபெருமானையும் பணியாத அவ்வளவுக்கு உயர்ந்து விட்டன, இல்லையா? என்று மணிவாசகர் புகழ்வதுபோல் இழித்துரைக்கின்றார்.

எனவே, “கிற்றவா’ என்ற ஒரு திருவாசகத்தில் நான்கு உலகியல்கள் விளக்கமாக வருவதைக் கண்டு இன்புறுகின்றோம். இவ்விளக்கநெறியைப் பண்டிதமணியம் என்று குறியிடலாம். நீத்தல் விண்ணப்பத்தில் -

செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற் பன்னாள் விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாயறுகால் உழுகின்ற பூமுடி யுத்தர கோசமங் கைக்கரசே வழிநின்று நின்னரு ளாரமு துட்ட மறுத்தனனே என்ற திருவாசகத்தில் (5) தான் எவ்வளவு புரியாமல் நடந்து கொண்டாலும்,ஒதுங்கினாலும், தன்னை விட்டு விடக்கூடாது என்று இறைவனை வேண்டுவர் நம் அடிகளார்.

ஒருவனை ஒருவன் வழிமறிக்கின்றான் என்றால் துன்புறுத்திப் பொருள் கவர்ந்து வழிப்பறி செய்வதற்கல்லவா? 'பொருள்கொண்டுபுண்செயின் அல்லதையார்க்கும் அருளில் எயினர்' எனச் சிலம்பும், கொள்ளும் பொருளிலராயினும், வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து உயிர் வவ்வலின்’ எனப்பாலைக்கலியும் வழிப்பறியின் கொடுமைகளைச் சுட்டும். இஃது உலக நிகழ்ச்சி. இறைவன் செயலோ இதற்கு மாறானது. மணிவாசகர் சென்றபோது இறைவன் வழியிடை நின்றது உண்மை. நின்றது பறிப்புக்கன்று, வழிநின்ற இறைவன் என்ன செய்தான்? வேறு யாரிடமும் பெறவியலாத அருள் நிறைந்த அமுதை வலிந்து வழங்கினான். உலக வழிப்பறியில் பறிஞன் நடையாளியைத் தொல்லைப்படுத்திப் பொருள் வாங்குவான். இறைவனது வழிமறியலிலோ அவன் நயந்து அருட்பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/92&oldid=551090" இலிருந்து மீள்விக்கப்பட்டது