பக்கம்:இலக்கியச் சாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

91



பொருளை இனிமையாக வாய்மடுக்கின்றான். பிறவிச் செலவினராகிய மணிவாசகர் அதனைப் பெற மறுத்து இறைவனைத் தொல்லை செய்கின்றார்.

‘வழிநின்று நின் அருளாரமுது ஊட்டமறுத்தனன் என்ற திருவாசகத்துக்கு வழிப்பறியுலகியலை உட்கொண்டு எழுதிய கதிர்மணி விளக்கம் சுவையுடையது மட்டுமன்று, அடியார்களை ஆட்கொள்ளும் இறைவனது வன்மை நிலையையும் புலப்படுத்துகின்றது. திருவெம்பாவையில்

செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக்கேர்தாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி என்ற திருவெம்பாவை (17) சிவபெருமானின் அருமையையும் எளிமையையும் புலப்படுத்தும். இதனை ஒர் உலகியற் காட்சியில் வைத்துக் கதிர்மணியுரை நம்மைக் கவரும்.

பேரரசன் ஒருவன் தனக்குரிய தலை நகரைவிட்டுப் பிறிதோரிடம் சென்றாலும், சென்று தங்கியிகுக்குங்காலம் சிறிதாக இருந்தாலும், தலைநகர் போன்ற வசதிகளையும் சுற்று வனப்புக்களையும் அமைத்தாக வேண்டும். இடம் மாறியதற்காக இன்னிலை மாறக்கூடாது. பதவியின் மதிப்பு அத்தகையது. அதுவும் அவன்தன் அரசியொடு இடம் பெயர்ந்தானாயின், மேலும் மனைச் சூழ்நிலை அவ்விடத்தும் போற்றப்படவேண்டும். இஃது ஆட்சியுலகில் காணப்படும் முறை.

சிவனோ திருமால் நான்முகன் தேவர்கட்கெல்லாம் அரியவன். அவன் தனக்குரிய இடத்திலிருந்து அன்பர்களின் இல்லந்தோறும் செல்லும் போது, அவன் பெருமைக்குத்தக ஏழையடிவர்கள் அடிச்சிகளின் குடில்களை அழகுபடுத்த இயலுமா? சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்’ என்ற கோவைப்படி, இறைவன் தான் அன்பர்கள் புறத்தகுதிக்கு இறங்கி வந்து உடனுறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/93&oldid=551091" இலிருந்து மீள்விக்கப்பட்டது