பக்கம்:இலக்கியச் சாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

வ.சுப. மாணிக்கனார்



முந்தியது எது?

முதற்கண் பாடப்பெற்றது திருக்கோவையா, திருவாசகமா? இரு நூல்களின் ஆராய்ச்சிக்கும் மணிவாசகரின் மனநிலை வரலாற்றை அறிதற்கும் இதன் முடிபு இன்றியமையாதது. திருவாசகம் பல்கால் பல தலங்களிற் பாடப்பெற்ற பாடல்களின் தொகை நூல். ஒரு சிலவற்றைத் தவிரப் பெரும்பாலானவை இறைவனால்ஆட்கொள்ளப்பெற்றபின்னர்செய்யப்பெற்றவை. பெரியோனாகவந்து இறைவன் கழல்காட்டிப்பிரிந்துவிட்டான். பிரிவு பொறாதும் தனிமை பொறாதும் மணிவாசகர் புலம்பிய ஏக்கப் பாடல்களே திருவாசகம். 'எல்லையில் கழல் கண்டும் பிரிந்தனன்’ எனவும், இன்னருள் புரிந்த தலைவனை நனிகாணேன்"எனவும், காணுமாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும் பாணேபேசி என்தன்னைப் படுத்ததென்ன பரஞ்சோதி எனவும், எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்தாற்றேனே” எனவும் அடிகள் பாடல்தோறும் புலம்புவதை உணர்கின்றோம். அகத்துறைக்கண் பாலைப் பாடல் போலச் சமயத்துறையில் திருவாசகம் பாலைப் பாடல் என்பது என் கருத்து.

கயல்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக்கலந் தாண்டலுமே அயல்மாண்டு அருவினைச் சுற்றமுமாண்டு அவனியின்மேல் மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண்டு என்னுடைய செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமே என்ற திருத்தெள்ளேனத்தில் மற்றுள்ள வாசகம் மாண்டு’ என்ற தொடரின் உணர்ச்சி நினையத்தகும். இவ்வேகவுணர்வுக்குப்பின், தொல்காப்பியத்யைம் சங்க அகப் பாடல்களையும் அகவிலக்கணங்களையும் தொகுத்து ஆராய்ந்து துறைகளை நிரல்பட வகுத்துத் தொடர் நிலைச் செய்யுள் எனத் தகும்.நானூறு பாடல் யாத்து ஒருகோவைப்பட எழுதும் உலக மனவியல் அடிகளாருக்கு வாராது. சட்டெனப் பிரிந்து மறைந்த பெரியோன் கழலைக்காணுவதே துடிப்பாகக் கொண்ட மணிவாசகர் அலறி உலறி எவ்விடத்தான் சிவன், எவர்கண்டனர் என்று ஒடிப்பாடித் திரிந்த அடியவரேயன்றி அதன் பின்னர் ஒரிடத்து அமர்ந்து ஒரு தொடர் நூல் எழுதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/96&oldid=551094" இலிருந்து மீள்விக்கப்பட்டது