பக்கம்:இலக்கியச் சாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வ.சுப. மாணிக்கனார்



மோகம் அறுத்திடினாம் முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையர்பால் துதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டுதனை ஏதாகச் சொல்லுவேன் யான் என்ற திருக்களிற்றப்படியால் காமம் துதலுதலும் காமநடை ஆளுதலும் தமிழ்ச் சமயங்களுக்கு இயற்கை என்பது பெறப்படும். பாட்டுடைத்தலைவன்

இனி சிற்றம்பலக் கோவையின் பொருளும் நடையும் பற்றிச் சங்க இலக்கியத்தோடு சில கூறுகளில் ஒப்பிட்டுக் காண்போம். ‘மக்கள் நுதலிய அகன் ஐந்திணை' என்று தொல்காப்பியம் கூறுதலின், அகப்பாடலில் முதல் கரு வுரி மூன்றிலும் மக்களே இடம்பெறுவர்.தலைவன் தலைவிதோழி அன்னை முதலான கிளவிப் பாத்திரங்கள் இயற்பெயர் பெறுவதில்லை என்பது தெரிந்த மரபு. பிற்காலக் கோவைகளிலும் இம்மரபு மாறவில்லை. ஆனால் முதல் கருப் பகுதிகளிலும் பேரும் பிறவும் மக்கள் தொடர்புடையனவே இடம் பெறுவது சங்கவழக்கு. -

பாரி பறம்பிற் பணிச்சுனைத் தெண்ணிர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய அற்றால் அன்பின் பாலே (குறுந். 196) ஒளிறுவாட் டானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளு ரன்னவென் - ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க (அகம். 46) இக்குறுந்தொகை அகப் பாடல்களில் வேள்பாரியும் அவன் பறம்பும், கொற்றச் செழியனும் அவன் அள்ளூரும் கருப்பொருட் பகுதியில் வந்துள்ளன. திருக்கோவையிலோ இவ்வுலகத்தின் தில்லை பேசப்பட்டாலும், பாட்டுடைத் தலைவனாக வருபவன் மாந்தனல்லன், இறையோன்.

பாட்டுடைத் தலைவன் தில்லைக் கூத்தப்பிரான் என்பது மட்டுமன்று. அத்தில்லை, வருங்குன்றம் ஒன்றுரித்தவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/98&oldid=551096" இலிருந்து மீள்விக்கப்பட்டது