பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. விலங்குகள்

விலங்குகளில் ஊர்வனவும், நீர்வாழ்வனவும் அடங்கப் பெறும். முன்னர்க் காட்டிய விலங்குகள் தவிர வேறு சில விலங்குகளும் தமிழ் நாட்டில் வாழ்கின்றன. அவை அணில், ஆடு, ஆமான், ஆமை, ஆனேறு, எலி, எறும்பு, ஓந்தி, கடமா, குதிரை, குரங்கு, தவளை, நண்டு, நாய், பசு, பல்லி, பாம்பு, மரை இனம், முதலை, வருடை, வரையா, வெருகு என்பனவாகும். இவ்விலங்குகள் அனைத்தும் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருந்தாலும் வேழம், புலி, மான், குரங்கு, நீர்நாய் முதலியன சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான பாடல்களில் தமிழ்ப் புலவர்களால் பாராட்டப்பெற்றுள்ளன.

உயிர்களில் பெரியது

உயிர்களில் பெரியது வேழமாகும். இதனை யானே எனவும், ஆனை எனவும் வழங்குகின்றோம். "முத்திறத்தன வெண்ணலப் பிறப்பின் மூரி வெங்களியானை" என்று மகாபாரதத்தில் கூறியிருப்பது போன்று வேழமானது மூவகைப் பிறப்புடையது என்று சொல்லப்படுகின்றது. இவற்றை முறையே கிரிசரம் (மலையில் பிறப்பது), வனசரம் (வனத்தில் பிறப்பது), மூரிசரம் (கடலிற் பிறப்பது) என வழங்குவர். வேழத்தின் துதிக்கை நிலம்தோய அமைவதே நல் இலக்கணமாகும். யானையின் உருவினைப்பற்றிக் கூற வந்த தமிழ்ப் புலவர்கள் அது சிறிய கண்களையும், ஆழ்ந்த வாயையும், மெலிந்த தலையையும், சேம்பின் இலையை ஒத்த செவிகளையும், தினைக் கதிரைப்போன்ற துதிக்கையையும், பேயின் பல்லைப்போன்று விளங்கும் நகங்களையும் உடையது எனப் பலவாறாகப் பாடியுள்ளனர். மூங்கில், கரும்பு,