பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 11 -

புலியைத் தாக்கிப் புண்ணுறும் யானை, அப் புலியை வருத்தும் களிறு, வாழையால் மதனழிந்து கிடக்கும் களிற்றைத் தன் கையால் தடவி உபசரிக்கும் பிடி, யாமரப் பட்டையை உரித்துத் தன் பிடிக்குக் கொடுத்து அதன் பசியைக் களையும் களிறு, புழுதி படிந்த மேனியுடன் குண்டுக் கற்களைப்போல நிற்கும் ஆண் யானைகள் முதலியவற்றை எல்லாம் செந்தமிழ்ப் புலவர்கள் செவ்விய முறையில் சித்திரித்துள்ளனர்.

இசைக்கு மயங்கிய களிறு

குன்றா அழகுடைய குறிஞ்சி நிலத்தில் தினைப்புனப் பரண் மேலிருந்து பாவையொருவள் குறிஞ்சிப் பண்பாடி நின்றாள். அதுகால் கடும்பசிகொண்ட களிறொன்று பயிரை அழித்துத் தினைக்கதிரைத் தின்று தன் பசியைப் போக்கிக்கொள்ள தினைப்புன வயலிலே நுழைந்தது. ஆனால் குறிஞ்சி நிலக் குலக்கொடி பாடிய அமுத இசை, இன்பத் தென்றலிலே மிதந்து வந்து களிற்றின் காதுகளிலே பாய்ந்தது. பாயவே களிறு தன் வசமிழந்து இன்னிசையின் இன்பப் போதையிலே இன்புற்று மயங்கி நின்றது. இதை அகநானூற்றுப் பாடலொன்று அழகுத் தமிழில் அள்ளித் தருகின்றது. அது வருமாறு :

“ ஒலியல் வார்மயிரு ளரினன் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
பாடா அப் பைங்கண் பாடுபெற் றொய்யென
மறம் புகன் மழகளிறு றங்கும் நாடன்."

களிறு தரு கூட்டம்

சந்தனமும், சண்பகமும், தேமாவும்; தீம்பலவும், அசோகும், வேங்கையும் மலர்ந்து; மாதவியும், மல்லிகையும்