பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 19 —


என்பது புள்ளி எனப் பொருள்படும். உழுந்து, வரகு, அறுகு, மரல், பயறு முதலியன மானின் உணவுப்பொருள்களாகும்.

ஆண் மான் நெறிந்தும் திரிந்தும் கவைத்தும் விளங்கும் கொம்புகளைக் கொண்டிருக்கும். கானவர் மானினே அம்பெய்துகொன்று அதனது இறைச்சியை உணவாகவும் தோலினை உடையாகவும் கொள்வர்.

மான்களின் காதல் திறம்

வலிய வேய்வாடும் கொடிய காட்டில் நிழலின்றி இரண்டு மான்கள் தவிக்கின்றன. ஒன்று ஆண் மான், மற்றொன்று மடப்பினை. தன் காதற் பிணை நிழலில்லாத காரணத்தால் மிகவும் வாடிப்போகும் என்று கருதிய ஆண் மான் எப்படியாவது ஒரு மரத்தடியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று படாதபாடுபட்டது. ஆனால் அது முடியாமற் போகவே ஆண் மான் தன் கிழலைக் கொடுத்து நின்றது. இக் காட்சியினை,

" இன்னிழல் இன்மையான்
வருந்திய மடப் பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்தளிக்கும்
கலையெனவும் உரைத்தனரே ”

என புலவர் ஒருவர் பாடியுள்ளார்.

கற்றோர் ஏத்தும் கவரிமான்

மான்களில் ஒன்றான கவரிமான் மானத்திற் சிறந்ததாகப் பேசப்படுகின்றது. சிறந்த மானமுடையவர்களைப்பற்றிக் கூறவந்த வள்ளுவப் பெருந்தகை தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் மானம்