பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 20 —

அழிய நேர்ந்தால் உயிரையும் விட்டுவிடுவர் என்ற கருத்துப்பட,

”மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்”

என்று பாடியுள்ளார்.

ஆண் மானின் தவிப்பு

பெண் மான் ஒன்று வேடன் ஒருவனால் வீழ்த்தப்பட்டது. ஆனால் அதன் குட்டிகளோ துன்பம் அறியாமல் துள்ளிக் குதித்து விளையாடின முறுக்கேறிய கொம்புடைய ஆண் மான் இருதலைக்கொள்ளி எறும்புபோல் விளங்கியது. தன் துணையை இழந்த வருத்தம் ஒரு பக்கம் வாட்டிப் பிழிய, மற்றொரு பக்கம் அன்னையை இழந்தோமா என்றும் அறியாத நிலையில் துள்ளிக் குதிக்கும் குட்டிகளின் காட்சி நிலைதடுமாறச் செய்கிறது. பாவம்! அதனது வேதனை அளவிடற்கரியது. உணவு உட் கொள்ளாது, நீர் கூட அருந்தாது இரலை தன் துணையை எண்ணி எண்ணி ஏங்கி நின்றது. இதனே,

”செவ்வாய்ப் பகழிச் செயிர் நோக்கு ஆடவர்
கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக்
குறுநெடுந்துணைய மறிபுடை ஆடப்
புன்கண் கொண்ட திரிமருப்பு இரலை
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
செய்தலம் படுவில் சில்நீர் உண்ணாது
எஃகுறு மாந்தரின் இணைந்து கண் படுக்கும்."

என அகநானூறு எவர் இதயத்தையும் உருக்கிவிடும் வகையில் எடுத்துரைக்கின்றது. மற்றோரிடத்தில் பேய்த் தேரை நாடி நீர் வேட்கைகொண்டு ஓடி ஓடி இளைத்து