பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 23 -

நன்னடை போட்டு நிற்பர். பல நிறக் காளைகள் கனல் கக்கி நிற்கும். மலையிடத்தினின்றும் வீழ்கின்ற அருவிகள் போல வெள்ளிய கால்களையுடைய கருமையான ஏறுகளும், அந்தியில் செக்கச் சிவந்து விளங்கும் ஆகாயம்போல அழகிய ஒளி பரந்த வெள்ளைப் புள்ளிகளைக்கொண்ட சிவந்த ஏறுகளும், இறைவன் சூடிய இளைய திங்களைப் போல வளைந்த கொம்புகளையுடைய ஏறுகளும், பொருகின்ற மாறுபாட்டினையும் வலியினையுமுடைய பிற ஏறுகள் பலவும் ’ஏறுகோள்’ பறையின் முழக்கத்தினைக் கேட்டு எக்காளமிட்டு வீரர்களை எதிர்நோக்கி நிற்கும். மணம் வீசும் மலர்களையும், பொன்னொளி வீசும் மகரக் குழைகளையும் அணிந்து, ஏறு தழுவுதலைக் காணவேண்டி முல்லை முகையினையும் மயிற் பீலியின் மருந்தும் (அடி) நிறைத்தாலொத்த பற்களையுடையராய், பெரிய குளிர்ச்சி பொருந்திய கண்களையுடையராய், தேனினும் இனிய சொற்களையுடையராய் விளங்கும் மடப்பம் பொருந்திய மங்கையர் பலர் வந்து பரண் மீதேறி அமருவர்.

ஏறுகளைத் தழுவுதற்கு விரும்பிய வீரர் அச்சம் ஏதுமின்றிக் களத்திலே குதிப்பர். ஏறுகளும் அப் பொதுவரைத் தெரிந்து தெரிந்து தன் கூரிய கொம்புகளால் குத்தும். குத்தவே ஏற்றினங்களின் குருதி தோய்ந்த கொம்புகளுடனே இளைஞர் பலரது குடர்கள் சுற்றிப் பிணித்திருக்கும். இதனை,

"தகைவகை மிசைமிசைப் பாயியர்
ஆர்த்துடன் எதிரெதிர் சென்றார் பலர்;
கொலைமலி சிலைசெறி செயிரயர் சினஞ் சிறந்து
உருத்தெழுந் தோடின்று மேல்;
எழுந்தது துகள்