பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



– 26 —

ஆடு

ஆட்டினைப் பற்றி விரிவாக ஏனோ ஒன்றும் கூறப் பெறவில்லை. ஆனால் ஒரு புலவர் ஆட்டு மந்தையைக் கொக்கின் கூட்டத்திற்கு உவமையாக ஓரிடத்தில் குறிப்பிடுகின்றர். குறிஞ்சி நில மக்கள் தங்கள் கடவுளாகிய குமரனுக்கு எடுக்கும் விழாவில் வெறியாடுங்கால் ஆட்டுக் குட்டியினைப் பலி கொடுத்தனர் என்பது தெரிய வருகின்றது. சிறிய தலையை உடைய வெள்ளாட்டினை மக்கள் வெள்ளை என்று அழைத்தனர்.

நீர் வாழ் விலங்குகள்

நீரில் வாழும் பறவைகளைப் போன்றே நீரில் வாழும் விலங்குகளும் உள்ளன. மீன், முதலை, தவளை, ஆமை முதலியன இவ்வினத்தைச்சாரும். மீன்களிற் பலவகை உண்டு. அயிரை, கயல், சுறா, ஆரல், கெண்டை, வாளை எனப் பல்வகை மீன்கள் நூல்களிலே பேசப்படுகின்றன. மீன் நெய்தல் நில மக்களுக்கும் பாணர்களுக்கும் சிறந்த உணவாகப் பயன்பட்டு வந்தது. கல மிவர்ந்து கடலிற் சென்று தூண்டிலெறிந்தும், வலை வீசியும் மீன்களைப் பிடித்து வந்து அவற்றை விற்று வயிறு வளர்த்தனர் நெய்தல் நில மக்கள். மீன்களில் அயிரை மீனையும், ஆரல் மீனையும் நாரை உண்ணும். நீர் நிறைந்து காறும் பொய்கைகளிற் பெரிதும் காணப்படும். ஆரல் மீனின் முட்டை மிகச்சிறியதாய் ஞாழற் பூவைப்போன்று தோன்றும். வளைந்த காலையும் உடலையும் உடைய இறு மீன் கழிகளில் வாழும் இதனை இறவெனவும் கூறுவர், புல்வர்கள். இதனை அன்றிலின்வளைந்த வாய்க்கு உவமையாகக் கூறுவர். கடலில்வாழும் சுறாமீன் மிக்க வலிமையுடையதாகும்; நீண்ட