பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
– 27 —

கொம்பை உடையதாகும். இதனை வலையாற் பிடித்தல் மிகக் கடினம். எனவே பரதவர் எறியுளியினை எறிந்து குத்திக் கொல்வர். கொம்பையுடைய இதனைக் கோட்டு மீனென்று கூறுவர். தனது கொம்பினால் வலைஞரை எறிந்து புண்படுத்தும் ஆற்றல் உடைய இதனை இதனது வலிமை கருதி வயச்சுறா என மொழிதலும் உண்டு. நீர் நாய்க்கு உணவாகும் வாளை என்னும் மின் சிறிய நீர் நிலைகளிலும், பொய்கைகளிலும் வாழும். இது மாம்பழத்தை உண்ணுமென்றும், இதன் பெண்னை நாகென்பது மரபு என்றும் தெரிய வருகின்றது. கயல் மீனைப் பற்றிப் பாடாத புலவரே இல்லையெனக் கூறலாம். பெண்களது கண்களைப் பற்றிக் கூறும் பொழுதெல்லாம் கயல் மீனையே உவமையாகக் கூறியுள்ளார். ஒன்றையொன்று பொரும் இணைக் கயலே மகளிர் கண்களுக்கு ஒப்பாக மொழிவர். பொய்கையில் வாழ்வதும், பிரப்பம் பழத்தை உண்ணுவதுமாகிய கெண்டை மீன் நாரைக்குச் சிறத்த உணவாகும்.

மீனைப் பற்றிய சொல்லோவிய மொன்றினை நம்மால் அகநானுTறு என்னும் நூலிலே காண முடிகின்றது. கலமிவர்ந்து நடுக்கடலில் சென்று கொண்டிருந்த பரதவரிடம் பெரிய மீனொன்று எவ்வாறே சிக்கிக் கொண்டது. தப்பி விட முயன்ற அதனை விடாமல் பிடித்துவிட எண்ணிய பரதவர் முன்னர்ச் சொல்லப்பட்ட 'எறி உளி' என்னும் கருவியினை எறிந்து அதனைக் குத்திக் குதூகலித்து நின்றனர். ஆனால் அப்பெரு மீனோ இதனைப் பொருட்படுத்தாது உடலிலிருந்து குருதி யொழுக, தன்னக் காத்துக் கொள்வதற்காக வேண்டி மீண்டும் போராடத் தொடங்குகின்றது. அங்கமிங்கும் துள்ளியும், கடல் நீரைக் கலக்கியும் போராட்டம் நடத்திய அம்மீன் இறுதியில் உரன் அழிந்து வரிசையாக உள்ள படகு