பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
– 28 —

களின் அருகிலே ஒதுங்கியது. இவ்வாறு தன் உயிரைக் காத்தற் பொருட்டு மீனென்று நடத்திய உயிர்ப் போராட்டத்தினை உலோச்சனார் என்னும் புலவர் பின் வருமாறு காட்டுகின்றார்.

           "குறி இறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
            வறியுகரி பொருத ஏமுறு பெருமீன்
            புண் உமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
            விசும்பணி வில்லின் போகிப் பசும்பிசிர்த்
            திரையயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து
            நிரை திமில் மருங்கில் படர்தரும் ..... "

நீர் வாழ்வனவற்றில் ஒன்றான ஆமையைப் பற்றி தமிழ்ப் புலவர்கள் பேசுங்கால் ஆமையின் பிள்ளையாகிய பார்ப்பு அதன் தாய் முகம் பார்த்து வளரும் என்றும் 'யாமைப் பார்ப்பினன்ன காமம்’ என்றும் கூறியுள்ளனர்

முதலை என்பது கொடிய விலங்குகளில் ஒன்றாகும். வளைந்த கால்களையுடையது. இது வாழும் நீர்த்துறையின் அருகே செல்வதற்கு எவரும் அஞ்சுவர். தவளை என்பது நீரிலும் நீரின் கரையிலும் வாழ்வதாகும். இது சிறந்த உணவாகும். பாம்பானது இதனை இரையாகக் கொள்ளுங்கால் உடனே விழுங்கி விடாது. தனது வாயில் தவளையானது சிறிது நேரம் உயிருடன் இருக்கும். அங்நேரத்தில் அது பெரிதும் வருந்தும். இதனை ஒரு புலவர் 'பாம்பின் வாய்த் தேரை போலும்,' எனக் குறிப்பிடுகின்றார். இதில் தவளையின் இனமாகிய தேரை என்பது பேசப்படுகின்றது. இத்தேரை பகுவாயை உடையது ; கட்டைப் பறையைப் போல ஒலிக்கும்; அனைகளில் வாழும். தாய் சாகுமாறு பிறக்கும் நண்டும், பிறந்த பார்ப்பினைப் பெற்ற முதலையே தின்னும் அன்பின்மையும் ஒரு புலவரால் பின் வருமாறு கூறப்படுகின்றது.

           "தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
            பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்"