பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
– 31 —

என்னும் பாடலையும் செல்லி என்னும் புலவர் எழுதிய 'ஸ்கைலார்க்' என்ற பாடலையும் கூறலாம். புரட்சிக்கவி பாரதியாரின் குயில் பாட்டும் இத்தகையதே. ஆனால் சங்க இலக்கியப் புலவர்களிடம் இத்தகைய உணர்ச்சி அறவே கிடையாது. வீடு, நாடு அதாவது அகம், புறம் என்று வரையறுத்துப் பாடியதே இதற்குக் காரணமாகும். அன்புடை ஐந்தினை கூறும் ஐங்குறுநூறு என்ற எட்டுத்தொகை நூலில் கபிலர் பாடிய மயில், குயில் வெள்ளாங் குருகுப் பத்தில் முதலிடம் வாழ்க்கைக்கும், பின்னணி இயற்கைக்கும் கொடுத்துப் புலவர் மறைந்தே காணப்படுகின்றார் ஆனால் ஆங்கிலப் புலவர் செல்லி (Shelley) இதற்கு நேர்மாறாகத் தன்னை நினைந்தே பாடுகின்றார். பறவைகளை வியத்தல் மாத்திரம் ஆங்கிலப் புலவர்களிடம் காணப்படுகின்றது. இதனைப் பின்வரும் ஆங்கிலப் பாடல் இனிது விளக்கும். ,

“Teach me half the gladness
That thy brain must know
Such harmonious madness
From my lips would flow
The world should listen then as I am
listening now.” (Skylark)

இதன் பொருளாவது,

" உன் உள்ளம் அறிந்த இன்பத்தில் பாதியை
மாத்திரம் எனக்கு நீ கற்பித்தால்
என் உதடுகளில் மட்டில்லா இன்பப் பைத்தியம்
மடை கடந்தோடும்;
அதை நுகரும் உலகு நான் இப்பொழுது
உன் இசையில் ஈடுபட்டிருப்பது போல்
என்னில் ஈடுபடும்."