பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 32 –

தமிழ்ப் புலவர்கள் நிலத்திற்கேற்ற பறவைகளின் வாழ்க்கையைக் கண்டு தான் அதற்கேற்ற ஒழுக்கம் வகுத்தனர் போலும். காதல் வாழ்வில் நெறிமுறைக்குப் புலவர்கள் பறவைகளையே நோக்கினர். இத்தகைய ஒழுங்கு ஆங்கிலப் புலவர்களிடம் அணுவளவேனும் இல்லையென்று கூறலாம். இதற்கு எடுத்துக்காட்டாக ராபர்ட் லிண்ட் (Robbert Lind) என்னும் ஆங்கிலப் புலவர் இயற்கையை ஒட்டிக் கடற்கரையினைப் பாடாதிருப்பதைக் கூறலாம். வாத்தின் 'டக் டக்' என்னும் நடையொலி தவிர வேறொன்றும் அவரால் பேசப்படவில்லை.

குறுந்தொகை என்னும் எட்டுத்தொகை நூலில் நெய்தல் நிலத்தில் வாழும் காக்கை தூங்குவதற்கு அலை யொலி உதவி புரிந்ததென்றும், தேர் கரடு முரடான நிலத்தில் ஓடுதல்போல நாரை நெய்தல் நிலத்தில் ஓடுமென்றும் தமிழ்ப்புலவர்கள் நிலத்திற்கேற்றவாறு கூறியிருப்பன மிகவும் இன்பம் பயப்பனவாய் உள்ளன.

புலவர்களின் புலன்கள் நன்கு தீட்டப் பெற்றவை. கண்ணும் காதும் சிறப்பாக நுட்பமானவை. கண்னை வளர்த்த புலவர்களே மிகுதி. அசைவு, ஒலி, உருவம் என்ற மூன்று பேரழகுகளைக் கண்டும் கேட்டும் இன்புற்றனர். பார்வை, பறத்தல், நடத்தல் ஆடல் இவற்றால் அழகு அமையப் பெற்றிருப்பதைப் புலவர்கள் பறவைகளிடம் கண்டனர். இவ்வுண்மையினைப் பின்வரும் வரிகள் நன்கு வலியுறுத்தும்.

'வாவு பிறை வௌவால்'
'ளுமன் பறை நாரை'
'துள்ளு நடைக் குருவி'