பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 33 -

பறவைகளெல்லாம் எல்லாத் தொழிலும் துணையாகவே இருக்கும்; மிருகங்கள் இவ்வாறில்லை. எனவே சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காதல் வாழ்விற்குப் பறவைகள் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகின்றன. மயில், குயில், கிளி இந்த மூன்று பறவைகளும் வாழ்விற்குத் துணையான காரணத்தால் அவைகள் மிகுதியான பாடல்களில் பேசப்படுகின்றன.

குறிஞ்சிநிலப் பறவைகள்

ஆடும் மயில்

இயற்கை வளம் செறிந்தது மலை. எங்கும் ஓங்கி வளர்ந்து அசைந்தன மூங்கில்கள். அம்முங்கில்களைப் பல இடங்களில் வண்டுகள் துளைத்து விட்டன. மேல்காற்று மென்மையாக வீசிற்று. மேலும் அக்காற்று மூங்கிலில் உள்ள துளைகளின் வழியே செல்லவே, அதனல் இனிய ஒசை எழுந்தது. இவ்வினிய இசை குழலிசை போன்று விளங்க, வான் முகடுகளினின்றும் முடுகி இடியென எழுந்து வீழும் சாரல்கள் பின்னர் பரலையும் அறலையும் அரித்தரித்துப் பளிங்குருகிப் பாய்மா போல் இழிதரும் நீர் வீழ்ச்சியாகி, கற்களே உருட்டிக் கொண்டு 'டம் டம்' என்னும் பெரு முழக்கத்துடன் விழுவதால் ஏற்படும் ஒலியானது முழவொலி போன்று முழங்கிற்று. கண்ணுக்கினிய கலைமான் கூட்டம் தாழ ஒலிக்கும் கடிய குரல் வங்கியம் போன்று இன்னிசை எழுப்பிற்று. மலைப் பூஞ்சாரலில் வண்டுகள் எழுப்பும் ஒலியான்து யாழொலிபோல் எங்கும் கேட்டது. இவ்வாறு வேய்ங்குழல், நீர் முழவு, வண்டு யாழ், மான் தூம்பு ஆகிய இன்னிசைக் கருவிகள் இசைக்க, ஆடலிற் சிறந்த ஆரணங்கு போன்று அங்கு பயில்கின்ற மயிலொன்று இயலி ஆடிற்று. இவ்வாடலினை மந்திகளாகிய அவையோர் மருண்டு நோக்கினர். மந்தி