பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
— 39 —
' நேயக் கலவி மயக்கத்தே
நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கு மடநல்லீர்
மணிபொற் கபாடந் திறமினோ.'

பாலை நிலப் பறவைகள்

புறா, பருந்து, எருவை, கழுகு என்பன பாலைநிலப் பறவைகளாகும்.

புறா

மேற்கூறிய பறவைகளில் புறா காதலுக்குடைய பறவையாகும். ஓமை மரம், கள்ளி இவற்றின்மேல் புறா தங்குவதாக பல பாடல்கள் கூறுகின்றன. ஆனால் இன்று புறாக்கள் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் புறாக்கள் மேன் மாடங்களில் கூடுகட்டி வாழுகின்றன. கோயிலிடத்துள்ள கோபுரங்களின் உச்சியிலும் புறாக் கூடுகளைக் காணலாம். புறாவின் கழுத்திலே புள்ளிகள் உள்ளன. இது குறுக அடியிட்டு நடக்கும். புலவர்கள் இதனது புறத்தை உகாய் மரத்தின் அடிக்கு உவமையாகக கூறுவா.

புறாக் குடும்பம்

வெட்பம் மிகுந்த பாலை நிலம்; இலை உதிர்ந்த மரங்கள். இச்சூழ்நிலையில் அன்புகொண்ட இளைய பெண் புறாவானது வெப்பத்தால் தளர்ந்து துன்புற்று நிற்கின்றது. இதனைப் பெறாத ஆண் புறா தன் சிறகால் நிழல் கொடுத்து அதனது வருத்தத்தை ஆற்றும். இக் காட்சியினைப் பாலைக் கலியில் நாம் பார்க்கின்றோம்.