பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது– 43 –

புனம் காவல் செய்பவர்கள் பொழுது விடிந்து விட்டதை அறிய கோழி நாட்காலையில் கூவும். ஆந்தையின் அலறலும் அன்றிலின் குரலும் நள்ளிரவாகிய காலத்தினைக். காட்டி காதலைத் தாக்கின. நள்ளிரவில் தலைவன் வரவிற்குக் காத்திருக்கும் தலைவிக்கு ஆந்தையின் அலறல் தலைவன் இடையூறுகளை நினைவூட்டி அச்சுறுத்தும் என்று கூறப்படுகின்றது.

மக்களின் மணிப் பொறிகளில் ஒன்றான கோழி, வீட்டுக் கோழி, காட்டுக் கோழி, நீர்க் கோழி என முன்று வகைப்படும். மேலும் சம்பங் கோழி, பிற்காலத்தில் தோன்றிய வான்கோழி, கிண்ணிக் கோழி முதலியனவும் இவ்வினத்தையே சாரும். இவற்றுள் வீட்டுக் கோழி பல்வகையிலும் பயனுள்ளது. இது தினையைக் கவர்ந்துண்ணும். மிகுதியான உயரமும் நெடுந் தொலைவும் இது பறப்பதில்லை. இலக்கியத்தில் ஆண் சேவல் என்றும், பெண் பெட்டை என்றும், குஞ்சு பிள்ளை என்றும், கூறப்படும். சேவல் அழகிய வாலும், செங்காந்தளைப் போல் விளங்கும் கொண்டையும், தாடியும் உடையது குறுங் கால்களையுடைய பெட்டைக் கோழி எப்பொழுதும் குஞ்சுகளுடனே கூடியிருக்கும். வீட்டுக் கோழி நமக்குப் பேருதவியாக இருப்பதை நாம் இன்றும் காணலாம். இதனைக் கொன்று உண்ணும் பழக்கம் பண்டைக்கால முதலே இருந்து வருகின்றது என்பதை 'மனைவாழ் அளகின் வாட்டொடு பெறுகுவிர்' என வரும் பெரும்பாணாற்றுப்படை அடியினால் அறிய முடிகின்றது. இத்தகைய கோழியின் உருவினையே நம் குமரனும் தன் கொடியினில் கொண்டுள்ளான்.

நீர்க்கோழி என்பது நீலநிறமுடையதாகும். இதனைச் சம்பங் கோழி என்றும் மக்கள் வழங்குவர். இது முழவின்