பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
– 44 —

ஒலிப்போலக் கூவும். இது பெரும்பாலும் பெரிய ஏரிகளிலும், குளங்களிலும், குட்டைகளிலும் உள்ள நீரில் வாழும் புலால் உண்ணுவோர். இதன் கறியைப் பெரிதும் விரும்புவர். இன்றும் ஒரு சில மக்கள் இதனைத் துப்பாக்கியால். வேட்டையாடிக் கொணருவர். இது தண்ணிரில் மூழ்கி மூழ்கிச் செல்லுவதால் இதனைக் கிராம மக்கள் 'முக்களிப்பான்' என்று வழங்குகின்றனர். கழனிகளில் ஆணும் பெண்ணும் ஒன்றாய்த் திரிந்து கத்தும். தாமரை மலர்ந்த தண் தடாகத்தில் கூரிய உகிரையுடைய நீலச் சேவலைப் பிரிந்த பேடை அதையே எண்ணி வாடும் என ஓர் இலக்கியம் இதனைப்பற்றிக் கூறுகின்றது.

பொறிகளையுடைய கழுத்தையும், கவர்த்த குரலையும் உடைய காட்டுக் கோழியைக் கானங்கோழி என்றும், ஆண்டலை என்றும் மக்கள் உரைப்பர். பாலைக் காடுகளில் உறையும் இது நெற்கதிரைக் கொத்தித் தின்னும்.

கோழிக் குடும்பம்

ஒரு கோழி வேலியைச் சார்ந்துள்ள காட்டுப்பூனை துழைவதைக் கண்டு உயிர் நடுக்குற்றுக் கூவியது. பின்னர் அருகிலிருந்த சேவல் விளித்தது கண்டு அது பயம் தெளிந்தது. இக் காட்சியினை ஆசிரியர் தண் காற்பூட் கொல்லனார்,

'ஊர்முது வேலிப்பார் நடைவெருகின்
இருட்பகை வெரீஇய நாகிளம் பேடை
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டரற்றச்
........ . . . . . . . .....சேவலிற் றணியும்'
(புறம். 326)

என்று அழகுறக் காட்டுகின்றார். இது போன்றே இன்னும் இரு குடும்பங்கள் பேசப்படுகின்றன.