பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
— 51 -

கட்டளைக் கல்லைப்போலத் தோற்றச் செய்யும். இதனை, மின்னின் றூவி யிருங் குயில் பொன்னின் உரை திகழ் கட்டளை கடுப்ப மாச்சினை நறுந் தாது கொழுதும் " என்று குறுந்தொகை கூறுகின்றது. தாதிலாடிய குயிலுக்குக் கட்டளைக் கல்லை இதில் உவமித்தது போல,

" நறுந் தாதாடிய தும்பி பசுங் கேழ்ப்
பொன்னுரை கல்லினன் னிறம் பெறூஉம் "

என்று நற்றிணையில் தாதாடிய தும்பிக்கு கட்டளைக் கல்லை உவமித்திருத்தல் இங்கு எண்ணுதற்குரியதாகும்.

மயிலினைப் போன்றே குயிலும் பருவம் உணர்த்தும் பட்டியாக பைந்தமிழ் நாட்டவருக்கு விளங்குகின்றது எனக் கூறலாம். இளையோருக்கு இன்பம் ஊட்டும் இளவேனிலின் வருகையை, பாடும் குயில் இசைக்கும் சோக கீதத்திலிருந்து நன்கு தெரிந்து கொள்ளலாம். இளவேனில் காலத்தில்தான் அது மாமரக் கிளையிலிருந்து கொண்டு ஆரவாரத்தோடு பாடி, இன்பமுடன் கூவி மக்களை நோக்கி,

"அறிவுடையீர் அகறல் ஒம்புமின்"

என்று காதலர்கள் ஒருவரை யொருவர் விட்டுப் பிரியாது களிப்புடனிருக்க வேண்டிய காலம் இளவேனில், இளவேனில் என்று எடுத்துக் கூறும். இப் பருவத்து குயில் வேட்கை மிகுந்து வாழும். இதன் காரணமாக அது அடிக்கடி கத்தும். இதனைக் கூர்ந்து அறிந்த புரட்சிக்கவி பாரதி 'கத்தும் குயிலே!' என அதனை விளிக்கின்றார், பெடையுடன் கூடிய பின்னர் குயில் கத்தாது வாளா விருக்கும்.

குயில் அடைகாக்கத் தெரியாததால், முட்டையிட்ட குயில் முட்டையினைக் காக்கையின் கூட்டில் வைக்கும் என்ற தற்கால அறிஞர் கருத்திற்குச் சங்க இலக்கியத்