பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



– 52 –

தில் சான்றில்லை. காதலர்க்கு இன்பச் செய்தியை ஊட்டித் துன்புறுத்தும் இப்பறவை, வரிக்குயில், கருங்குயில், செம்போத்து என பலவகைப்படும்.

வண்டும் நண்டும்

வண்டாவது பறக்கும் தன்மையினைப் பெற்றிருப்பதால்தான் பறவை வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. இதனைப் புகழேந்தி அறுகால் சிறு பறவை எனக் கூறுகின்றார். தும்பி, தேன், சுரும்பு என வண்டு பலவகைப்படும். தும்பி என்பது இவைகளில் உயர்ந்ததாகும். ஐவகை நிலத்திலும் காணும் பூக்கள் தோறும் சென்று பயின்று அவைகளிலுள்ள தாதையும் தேனையும் இவைகள் உட்கொள்ளும். இதனையும் தூது விடுவதாகச் செய்யுளியற்றல் மரபாகும்.

ஒரு நாவற் கனியை அதன் நிறமும் வடிவமும் நோக்கித் தம் இனம் என்று கருதி வண்டுகள் மொய்த்தன. அதனைப் பழம் என்று கருதி ஒரு நண்டு வந்து கைக்கொண்டது. அது கண்டு வண்டுகள் யாழொலிபோல் ஆரவாரித்தன. இரை தேடும் நாரை ஒன்று அதுகால் ஆங்குவர அந்நண்டும் அப்பழத்தைக் கைவிட்டகன்றது. நற்றிணையில் காணும் இக் காட்சி நமக்கு நகைச்சுவை அளிப்பதாய் நனிசிறந்து விளங்குகின்றது.

வள்ளுவர் போற்றும் வானம்பாடி

வானம்பாடியானது வானத்தின் கண்ணே மிக உயரப்பறந்து சென்று இனிய கானம் இசைப்பதால் இப்பெயர் பெற்றது போலும். சிட்டுக்குருவிபோல் இப்பறவை உருவில் சிறியதாக இருந்தா இம் வானமுகட்டைக் கிழித்துச் சென்று பாட்டுப்பாடும் ஆற்றலுடையது. இது