குருவி இனத்தைச் சேர்ந்த தூக்கணாங் குருவி பனை மடலில் கூடுகட்டி வாழும். இதனது கூடு அறிவுடையோர் வியக்கத்தக்க வகையில் மிகவும் நுட்பமான அமைப்புடையதாக விளங்கும். இது குறித்து கலித்தொகையானது, " நுட்பமான அமைப்புடைய தூக்கணாங் குருவியின் கூட்டில் நாரானது எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்பதை அறிய முடியாததுபோல் போக்கறிய முடியாத வஞ்சகர் முளையையும் ஒருவராலும் அறிய முடியாது " என்று கூறியிருப்பது மிகவும் இன்பம் பயப்பதாய் உள்ளது.
ஆண்குருவியின் அன்பு
ஆண் குருவியொன்று தன் பெண் குருவி கருப்ப முதிர்ந்தமையால் அது கரு உயிர்த்தற் கேற்றவாறு மெக்தென்ற இடம் அமைத்தற் பொருட்டுக் கரும்பின் பூவைக் கோதும் என்று குறுந்தொகையில் காணும் காட்சி, பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்கள் கவலையுறாது களிப்புடன் இருத்தற்குக் கணவர் செய்யும் செயல்களை நம் நினைவிற்குக் கொண்டு வருகின்றது. இக் காட்சியினை,
" உள்ளூர்க்குரீ இத்துள்ளுநடைச் சேவல்
குன் முதிர் பேடைக் கீனிலிழை இயர்
தேம் பொதிக் கொண்ட தீங்கிழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்"
(குறு. 85)
என்று ஆசிரியர் நமக்குக் காட்டுகின்றார்.
ஊடலோ ஊடல்
ஆண் குருவி ஒன்று தன் பெடையைவிட்டு வேறோரு பேடுடன் கூடிக் காலந்தாழ்த்தித் தன் கூட்டிற்கு வந்தது. ஆண் குருவியின் உடலில் புணர் குறிகள் இருப்பதைக்