பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 59 —

“செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு
எறிந்தது பெறாது இரையிழந்து வருந்தி
மறிந்து நீங்கு மணிச்சிரல்"

எனப் பாடியுள்ளார். இது நீருள் துடுமெனப் பாய்ந்து முழ்கி மீனைப் பிடித்துக் கொல்லும். பின்னர் இது மரக்கிளையில் அமர்ந்து அதனை உண்ணும்.

யானையங்குருகு பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரிவதற்கில்லை. எனினும் இலக்கியங்களில் இதனது பெயர் காணப்படுகின்றது. பலர் இது நாரையைப் போன்று நீர் வாழ் பறவை இனத்தைச் சார்ந்ததாய் இருக்கும் எனக் கருதுகின்றனர்.

வெளவால் எனும் பறவை மரங்களிலும் பாழடைந்த இடங்களிலும் தலைகீழாகத் தொங்கும் தன்மையது. கரிய நிறமுடைய இதனது சிறகு வலிமையும் மென்மையும் வளைவும் கொண்டது. இதனது நகங்கள் மிகக் கூர்மை வாய்ந்தவை. இதனை வாவல் எனவும் கூறுவர். இரவில் இப்பறவை மெல்லப் பறந்துசென்று பழூஉ மரங்களை அடைந்து நெல்லிக்கனி, மாம்பழம், பலாப்பழம் முதலியவற்றை உண்டு திரும்பும்.

நுளம்பு என்பது ஈயின் வகையைச் சார்ந்தது ஆகும். இரவில் மாட்டைக் கடித்து இது துன்புறுத்தும் எனக் கூறப்படுகின்றது. கின்னரப் பறவை என்ற பறவையும் தமிழ்ப் புலவர்களால் பேசப்படுகின்றது. அழகாக ஆடக் கூடிய சிறகுகளை உடைய இப்பறவை மலைச்சாரல்களில் மிக இனிமையாகப் பாடித்திரியும். இவைதவிர, சிம்புள் என்று கூறப்படும் இருதலைப் புள்ளைப் பற்றிய செய்தியும் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றது. அப்பறவை இரண்டு தலைகளையும் எட்டுக் கால்களையும் வட்டமான கண்களையும் வளைந்த