பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 60 -

பல்லையும் உடையது என்று கூறப்படுகின்றது. ஈருடலும் ஒருயிரும் ஆக வாழுங் காதலர்க்கு, ஒருயிரும் இருதலையும் உடைய இப்பறவையினை உவமை காட்டுவது நந்தமிழ்ப் புலவரது மரபாகும்.

நாரைக்குப் புலவர் செய்த நலம்

பசி, பிணி, மூப்பு இம்மூன்றும் பறவை வாழ்விலும் உண்டு. பழுத்த இலைகளை இளந்தளிர்கள் காப்பதில்லை. ஆனால் பழுத்த கிழங்களை இளம்பிள்ளைகள் காப்பர். இது தான் மனிதனின் சிறப்பாகும். இவ்வடிப்படையில் கிழநாரை ஒன்றினை நீரோடு படிந்த, வளைந்த கிளை காப்பாற்றும் என்று குறுந்தொகையில் புலவரொருவர் கிழநாரைக்குச் செய்த நலம் நம் நாட்டத்தை எல்லாம் ஈர்ப்பதாய் உளளது.

“..................... பழவிறல்

பறைவலம் தப்பிய பைதல் நாரை

திரைதோய் வாங்குசினை இருக்கும்."
(குறு.)

இவ்வாறு வயது முதிர்ந்த காரணத்தால் பறக்க முடியாத நாரை பற்றி இரக்கம் தோன்ற ஆசிரியர் பாடியிருப்பது அவரது மென்மையான உள்ளத்தினைத் தெள்ளிதிற் புலப்படுத்தும்.

மேற்கூறிய நாரை, பெருநாரை, சிறுநாரை, கருநாரை, வெள்ளைநாரை, கூழைக்கடா என பலவகைப்படும். வெள்ளிய சிறகையும் பசிய காலையும் செவ்வாயையும் உடைய இப்பறவை அயிரை, ஆரல், கழிமீன், கெண்டை, நத்தை, நெற்கதிர் இவற்றயே உணவாகக் கொள்ளும். இது நீர்வாழ் பறவையாதலால், யாறு, கடல்,