- –68 –
"நாராய் நாராய் செங்கா னாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கா னாராய்
நீயுநின் மனைவியுங் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்தி வாவியுட்டங்கி
....................எம்மனைவியைக்கண்டு
.................................................................
.................................................................
"ஏழை யாளனைக் கண்டன மெனுமே ”
- (தனிப்பாடற்றிரட்டு.)
வரலாற்றில் ஒரு புதுமை
பறவைகளைக் குறித்துப் பாடிய காரணத்தால் சில புலவர்கள் தங்களது இயற்பெயருக்குமுன் சிறப்புப் பெயரைப் பெற்றனர். அதாவது பறவைகள் தங்களைப் பற்றிப் பாடிய புலவர்களுக்குப் பட்டங்கள் வழங்கின என்று கூறலாம். "விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே" என்று காக்கை கரைந்தமையைப் பாராட்டிக் கூறிய அருமைபற்றி நச்செள்ளையார் "காக்கை பாடினியார் நச்செள்ளையார்” என்றும், முதுமரப் பொந்திற். கதுமென வியம்பும் கூகைக் கோழியாளுந் தாழிய பெருங்காடு" என்று மயானத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் கூகைக் கோழியைப் பற்றிப் பாடிய புலவரைக் கூகைக் கோழியார்” என்றும் குப்பைக் கோழியின் சண்டையினை வருணித்த புலவரைக் "குப்பைக் கோழியார்" என்றும், அறுகால் பறவையாகிய தும்பியைப் பாடிய புலவரைத் "தும்பிசேர் கீரனார்" என்றும் மக்கள் பிற்காலத்தில் வழங்கலாயினர்.