பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 66 -

கோதாவரி ஆற்றின் கரையில் ஒருவகை மான். காவிரியிலே ஒரு வகை மீன், துங்கபத்திரையிலே ஒரு வகை மீன். வங்காளக் காடுகளிலே ஒரு வகைக் கரடி, மேற்கு மலைக் காடுகளிலே ஒரு வகைக் கரடி.

இந்தியாவிலே ஏறத்தாழ 500 வகையான விலங்குகள், 8000 வகையான பறவைகள் உள்ளன. இன்னும் எவ்வளவோ உயிரனங்கள் இங்கே உள.

விலங்குகள் வாழ்க்கையினை ஆராயவேண்டுமானால் நாம் இந்தியாவினை மட்டும் ஆராயக்கூடாது. ஏனென்றால் மலேயா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள உயிரினங்களும் இங்கே உலவுகின்றன. இந்திய உயிரினங்களின் வாழ்க்கையினை அறியப் பெரிதும் உதவ வல்லது இந்தியத் தீபகற்பமாகிய தென்னகமே எனில் தவறில்லே. இந்த இடத்திலே நாம் ஒன்றை நினைவிலே கொள்ளல் நலமே. அஃதாவது விலங்குகளின் வாழ்வை உருவாக்குவது எல்லைக்கோடுகள் அல்ல. மாறாக நில அமைப்பைப் பொறுத்தே அவற்றின் வாழ்வு அமையும். தென்னகத் திலே உள்ள நில அமைப்பும் காலநிலையும் உலகிலே வேறெங்கேயாவது இருப்பின் இரண்டு இடங்களிலும் ஒரே வகையான பறவைகளையும், விலங்குகளையும் பார்க்கலாம். எனவே விலங்குகள் நாடு விட்டு நாடு பெயர்ந்து போதல் பெருமளவில் உண்டு.

இந்தியாவைப் பொதுவாக மூவகைப் பகுதியாகப் பிரிக்கலாம்.

(1) தென்னகம், (2) கங்கைச் சமவெளி, (3) இமய மலைப் பகுதி.

1. தென்னகம்

தென்னகம், கங்கைச் சமவெளியினைவிட உயர்ந்தது. ஏறத்தாழ கங்கைச் சமவெளியின் நிலத்தைவிட 2500 அடி