பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 67 -

உயர்வானது. தென்னகம் முப்பக்கம் கடல்களாலும், ஒரு பக்கம் மலையாலும் சூழப்பெற்றது.

தென்னகம் மூவகை நில அமைப்பை உடையது 1. மேலேக் கடற்கரையானது, மேற்குத் தொடர்ச்சி மலை, நீலகிரி, ஆனைமலை, ஏலக்காய் மலை, மலையாளக் கடற்கரை என்பனவற்றைத் தன்னகத்தே அடக்கி உள்ளது. அங்கே 80 அங்குல மழை பெய்யும். மற்றும் நில வளமும், அப்பகுதி மிகவுடையது. எனவே உயிரினங்கள் அங்கு வெகுவாகப் பல்கி உள்ளன.

2. கிழக்குக் கடற்கரையோ எனின் அப்படியன்று. மழையோ மிகக்குறைவு. 40 அங்குலத்திற்குமேல் மழை பெய்யவே பெய்யாது. ஆற்றுப்படுகைகள் உள. நிலவளமும் குறைவு. -

3. நடுப்பகுதி இதைவிட மோசம். வெறும் குன்றுகளும், கற்றரைகளுமே நிறைந்துள்ளன. மழைவளம் கிடையாது.

தென்னகத்தில் வாழ்கின்ற விலங்குகள்:- வெறுவு, கலைமான், நரி, மந்தி, ஓநாய், செந்நாய், புள்ளிமான், சிறுத்தை, யானை, கரடி, புலி, உடும்பு, குரங்கு, காட்டெருமை, மெளா முதலியவையாம்.

இவை இமயமலை, வங்காளம் முதலிய பகுதிகளிலுள்ள விலங்குகளும் தென்னகக் காடுகளிலே உள்ளன.

2. கங்கைச் சமவெளி

கங்கைச் சமவெளி நல்ல நிலவளமும் நீர்வளமும் உடையது. அவற்றோடு அழகான கால நிலையும் உடையது. எனவே இப்பகுதியிலே மக்கள் செறிவு அதிகம். ஆனால் இதற்கு மேற்கே உள்ள இராசபுதனமோ நேர் எதிரிடை,