பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 68 -

அஃதாவது அஃதோர் பாலைவனம். ஆனால் ஒரு காலத்தில் அது வளமும் உயிரினமும் செறிந்த இடம் எனச்சொல்லப்படுகிறது.

ஆனால் நாடோறும் மக்கட் பெருக்கம் மிக அதிகமாகி வருகிறது. எனவே காடுகள் அழிந்து நாடாகின்றன. அதானல் காடுவாழ் உயிர்கள் அண்மையிலுள்ள காடுகளுக்கு நுழைகின்றன. வடக்கே இமயமலைப் பகுதிக்கும்.தெற்கே தென்னக மலைக் காடுகளுக்கும் விலங்குகள் விரைந்து வருகின்றன.

கங்கைச் சமவெளியின் உயிர் இனங்களை மூவகையாகப் பிரிக்கலாம்.

1. இமயமலைச் சாரலில் வாழ்வன:- புலி, சிறுத்தை, சாம்பார் மான், கரடி, குரைக்கும் மான், யானை, எருமை, நீர் யானை, சதுப்புநில மான், நாலு கொம்பு மான்.

2. நடுப்பகுதியில் வாழ்வன:- கருப்பெருமை.

3. ஆரவல்லி காட்டில் வாழ்வன:- புலி, சாம்பார் மான், குரைக்கும் மான், சிறுத்தை சோம்பேறிக் கரடி.

3. இமயமலைப்பகுதி

இப்பகுதியும் மூவகையாகப் பிரிபடும்.

1.மேற்கு இமயமலைப்பகுதி:- இப்பகுதியில் பலவித ஆடுகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள் வாழ்கின்றன. இவைகளில் கருப்புக் கரடியினை சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணலாம். 10,000 அடிக்கு மேற்பட்ட இடங்களில் பழுப்பு நிறக்கரடிகளும், செம்மறி ஆடுகளும், பணிச்சிறுத்தைகளும் காணப்படுகின்றன். ஏனைய மிருகங்களை திபெத்து நாட்டின் எல்லை ஓரத்திலே பார்க்கலாம்.