பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாட்டின் செல்வம்

விலங்குகளும் பறவைகளும் ஒரு நாட்டின் விலை மதிப்பற்ற பெரும் செல்வம். நம் நாட்டின் நிலையும் இதற்கு விதி விலக்கில்லை. விதி விலக்கில்லாதது மட்டுமல்ல, விலங்குகளோடும் பறவைகளோடும் வேறுபாடற்ற நிலையில் உறவுடையது. மனிதன் முதல் தேவன் வரை விலங்குகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள நாடு தமிழகம். சங்க இலக்கிய காலம் முதல் நேற்றுப் பாடிய பாரதி வரை பறவைகள், விலங்கினங்கள் பற்றிப் பாடிய பாடல்கள் நிறைந்த காடு. ஆண்டவர்க்கு ஊர்தியாய், அவதரிக்கும் பிறப்பாய், அறிவளிக்கும் ஆசானாய், விலங்கினமும் பறவையினமும் இந்நாட்டில் விளங்குவது ஒன்றே நம்மால் அவை கட்கு ஏற்ற உறவை விளக்கும். காக்கை கரைந்தது கண்டு பாடிய புலவர், காக்கைப் பாடினியார் என்றே கூறப்பட்ட நிலை சங்க இலக்கியம் கூறும். 'காக்கை குருவி எங்கள் சாதி' என்ற பாரதி பாட்டு காக்கையுடன் கொண்ட நல்லுணர்வைக்,காட்டும். இறை உணர்வில், இலக்கியத்தில், அழகுணர்வில், பலர் பாட்டில், விஞ்ஞானத்தில், பொருளாதாரத் துறையில் விலங்கினமும், பறவைகளும் நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையானாலும் காலப்போக்கில் அவைகள் புறக்கணிக்கப்பட்டன. புறக்கணிக்கப்பட்டதோடு நிற்கவில்லை, வேட்டையாடப்பட்டன. வேறு வழிகளிலும் அழித்து விடப்பட்டன.

உறவுணர்வு கொண்டிருந்த நிலை மாறி உயிர்வதை செய்யும் நிலைக்கு நம் நாட்டினர் வந்து விட்டனர். இறையுணர்வு நிலையிலிருந்து மனிதர்க்கு இரையாக ஆக்கிக்கொள்ளும் நிலைக்கு விலங்குகளை ஒழிக்க ஆரம்பித்தோம். இங்நிலையோடு நில்லாது இடையில் ஏற்பட்ட எண்ணெய் தட்டுப்பாடு காரணமாய் விலங்குகள் வாழும் காடுகளேயே