பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 71 -

கரிக்காக அழித்தோம். கண்ட பயன் என்ன? விலங்குகள் ஒழிந்தது மட்டுமல்ல, நாட்டில் மழை நின்று நாட்டில் வளமும் குறைந்தது. ஒரு புறம் மரம் நடு விழாவிற்கு அரசியலார் முற்படுவார்கள். மற்றொருபுறம் மரங்கள் கரிக்காக அழிக்கப்பட்டு காடுகள் மறைந்து வருகின்றன வீழ்ந்துபடும் காடுகள் ஒரு புறமிருக்க வெடிமருந்து ஒருபுறத்தில் விலங்கினங்களின் அழிவிற்கு ஒரு காரணமாயிற்று. வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது மனிதனுக்குக் கொண்டாட்டமாய்விட்டது. விலங்குகளை வேட்டையாடி தன் விருப்பம்போல் மனம்போல் மகிழத்தான் விலங்குகள் படைக்கப்பட்டுள்ளன என எண்ணினான் மனிதன். வாழ இடமின்றி வனங்கள் அழிக்கப்படல் ஒருபுறம், தப்பி வாழ்ந்தாலும் வேட்டையாடப்படல் வேறொருபுறம் என்ற அளவிலே விலங்குகளின் விதி வேலை செய்தது. இந்நிலையில் சிங்கம் இந்நாட்டில் பெரிதும் காணப்படவில்லை. அசாமிலும் (Assam) காண்டாமிருகங்கள் பெருகி வருகின்றன. மானினங்கள் அழிக்கப்பட்டுவிட்டதால் மனிதனே புலிகளுக்கு உணவாக மாறி வருகின்றான். இந்நிலையில் வனவிலங்குப் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. இவைகள் மறையாது பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன? ஏற்ற செயலாற்றி பாதுகாக்கப்படா விடில் விலங்குகள், கனவுலகின் காட்சியாய், கடந்த காலத்தின் கற்பனையாய் ஆகும் நாள் வெகுதுாரத்தில் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

விலங்குகள்,பறவைகள் இவைகளின் பாதுகாப்பு ஏன்? சிங்கமும், சிறு நரியும், மானும், மரநாயும், கிளியும் குயிலும் நமக்கு எவ்விதத்தில் பயன்படுகின்றன? உணவளிக்கும் வயல்களுக்கு அவைகள் ஊறு செய்யவில்லையா? உழவு செய்யும் மாடுகளே விலங்குகள் உயிர்வதை செய்யவில்லையா?