பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 72 -

வேட்டைக்கென சட்ட திட்டங்கள் செய்யப்பட்ட பின்னர் வேட்டைக்காரர்கள் வந்து பேசுகின்றனர். விருப்பம்போல் வேட்டையாடினால் என்ன? விலங்கினமும் பறவைகளும் வேட்டையாடப்பட்டால் என்ன ? வாழ வேண்டியது யார்? மனிதனா? பிற உயிர்களா? இவ்வினைக்கள்தான் எழுகின்றன. மனிதனும் பிற உயிர்களும் ஒருவரோடொருவர் ஒன்று பட்டவர்களாய் வாழ வேண்டுமென்பதை மறந்திருக்கின்றனர். இவைகளால் நாம் பெறும் பல்வேறு பயன்களையும் மறந்திருக்கின்றனர். எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்கின்றோம் என எண்ணிப் பார்க்க வேண்டும். விலங்கினங்களும் பறவைகளும் அவைகள் வாழ்வதற்கென ஏற்ற இடங்களும் நம் நாட்டில் அதிகம் உள்ளன. எத்தனையோ பறவைகளும் விலங்குகளும் மறைந்துவிட்டன. எனவே இனியும் இழந்துவிட நாம் தயாராயில்லை. அவைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முன்வந்துள்ளோம். பாதுகாப்பு, பராமரிப்பு என்றால் கொடிய விலங்குகளைக் கொல்லாமல் விடுவது என்று பொருள் அல்ல. தேவை ஏற்படின் சிலவற்றைக் கொன்றும், சிலவற்றைத் தடைப்படுத்தியும் வைக்கவேண்டும். செடி கொடிகளைப் பாதுகாப்பது ஒருபுறமும், வனவிலங்குகளைப் பாதுகாப்பது மற்றொருபுறமும் என்ற நிலையில் தான் பாதுகாப்பும் பராமரிப்பும் நடைபெறும்.

இந்தியக் காட்டுச் சட்டத்தின் மூலம் சிலபகுதி காடுகள் ஒதுக்கப்பட்டன. அங்கு வேட்டையாட முடியாது. எனவே விலங்குகள் பாதுகாப்புப் பெற்றன. இருப்பினும் இதர இடங்களில் கண்மூடித்தனமாக விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. எனவே சட்டம் விரிவாக்கப்பட்டது. 1912-ஆம் ஆண்டு வனவிலங்குகள் பறவைகள் பாதுகாப்புச்சட்டம் ஒன்று செய்யப்பட்டது. அதன்படி சிலபகுதிகள் வனவிலங்கு பராமரிப்புச் சாலைகளுக்கு ஒதுக்க