பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 73 -

வும், சில இடங்களே வேட்டையாடக் கூடாத பகுதியென அறிவிக்கவும் காட்டு இலாக்காவினருக்கு அதிகாரமளிக்கப்பட்டது. துப்பாக்கி உபயோகிப்பதற்கு அனுமதி வழங்குவதிலும் கட்டுப்பாடு செய்யப்பட்டது.

தமிழக அரசும் காட்டு மிருகங்களைக் காப்பாற்ற 1879-ம் ஆண்டில் பல சட்டங்களை இயற்றியுள்ளது. பொதுமக்களும் ஒத்துழைத்தனர். நீலகிரிச் சங்கம் 1879-ல் நிறுவப்பட்டு பாதுகாப்புக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு கிட்டிற்று. அதே ஆண்டில் வேட்டையாடத் தகுதியில்லாத காலங்களைக் குறிப்பிட்டதுடன் நன்கு வளர்ச்சி பெறாத விலங்கினங்களுக்கும் பாதுகாப்பு அளித்தது. 1915ஆம் ஆண்டு மதுரை மாவட்ட தண்டல் நாயகத்தைத் தலைவராய்க்கொண்ட பழனிமலை வேட்டைச் சங்கம் நிறுவப்பட்டது. 1938-ஆம் ஆண்டு முதுமலை வனவிலங்குப் பராமரிப்பு நிலையம் நிறுவப்பட்டது. இங்நிலையம் உதக மண்டலத்திலிருந்து நாற்பது மைல் தொலைவிலுள்ளது. இங்குள்ள விலங்குகளோ பறவைகளோ வேட்டைப் பொருள்கள் அல்ல. வேட்டைக்காரர்களும் வேட்டையாட அனுமதிக்கப்படுவதில்லை. பார்வையாளராகச் செல்லுகின்ற மக்கள். கார்குடியிலும், முதுமலையிலும் தங்க வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

விலங்குகள் நிலை ஒரு புறமிருக்க பறவைகள் பராமரிப்புக்கென அரசியலார் திட்டம் வகுத்துள்ளனர். தீவிரமாய்ச் செயலாற்றியும் வருகின்றனர். செங்கற்பட்டு மாவட்டத்தில் இயற்கையாய் அமைந்துள்ள பறவைக் குடியிருப்பு ஒன்றை பறவைப் பராமரிப்பு நிலையமாக அமைத்துள்ளனர். சென்னை, திருச்சி சாலையில் 47 வது கல்லில் மேற்கே திரும்பி 3 கல் தொலைவு சென்று பின் 8 கல் தொலைவு அங்கிருந்து தெற்கே சென்றால், அங்கு 74 ஏக்கர் பரப்