பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 75 -

மரிப்பு மன்றம் ஏற்படுத்தப்பட்டது. 1952 ல் மைசூரிலும் 1955 ல் கல்கத்தாவிலும் கூடிய இம்மன்றத்தின் செயற்குழுவினர் 1953 ல் மத்திய பிரதேசத்திலும், 1955 ல் உதகமண்டலத்திலும் கூடினர். தமிழகமும் 1954ல் மாநில வனவிலங்குப் பராமரிப்பு மன்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலும் ரூ 135 லட்சம், இயங்கி வரும் பராமரிப்பு நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிய பூங்காக்கள் ஏற்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்குப் பராமரிப்பு மன்றமும் திட்டத்திற் கேற்ப மசோதா ஒன்றும் வழங்கியுள்ளது. இம் மசோதா அரசினர்க்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வேட்டையாடுதலைத் தடுக்கவும், பாது காக்கப்பட்ட பகுதிகளில் மேலும் விரிவுகள் செய்யவும் ஏற்பாடாகியுள்ளது. மேய்ச்சலும், மரம் வெட்டுதலும், எரித்தலும் கட்டுப்படுத்தப்பெறும்.

திட்டங்கள் தீட்டுவதால் மட்டுமோ அல்லது சட்டங்கள் செய்வதால் மட்டுமோ பயன் இல்லை. தீட்டிய திட்டங்களைச் செயலில் நிறைவேற்ற, போட்ட சட்டங்களை அமல் நடத்த, அதன்படி நடக்க கட்டுப்பட ஆள்வோரும் ஆளப் படுவோரும் முன்வர வேண்டும். ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அரசியலாரோடு மக்களும் ஒத்து உழைத்தால்தான் எத்திட்டமும் நிறைவேறும். எனவே வன விலங்கு பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் மக்களின் ஒத்து ழைப்பு மெத்தவும் தேவை. அரசியலாரின் அன்பழைப்பும் அவசியம்தான். வனவிலங்குகள் பாதுகாக்கப்பட, வனங்கள் பாதுகாக்கப்படவேண்டும். பூங்காக்கள் புதியன தோற்றுவிக்கப்படவேண்டும். பழையன பராமரிக்கப்பட வேண்டும். காட்டு மரங்களை வெட்டுதல் கூடாது. புதிய மரங்கள் பயிர் செய்யப்படுதலும் முறையே நடைபெற