பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


முருகாற்றுப்படை

பிறகும் கோபாலர் இலக்கியச் சான்று கேட்டார். அதற்கு நான், திருமுருகாற்றுப்படையில் முருகன் குன்று தோறும் ஆடுவதாகவும் குறிஞ்சிக் கிழவன்-மலை கிழவோன் என்றெல்லாம் கூறப்பட்டிருப்பதாகவும் சொல்வி, திருப்பதி மலையும் முருகன் ஆடும் குன்றாயிருக்கலாம் என்று கூறினேன். பின்னர் அய்யர், திரு முருகாற்றுப்படையில் திருப்பதி மலையை ஏன் நக்கீரர் சொல்லவில்லை என்று கேட்டார். அதற்கு நான், எல்லா மலைகளையும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அப்படியென்றால் திருத்தணிகை முதலிய மற்ற மலைகளையெல்லாம் சொல்ல வேண்டியதில்லையா? என்று கூறிப் பின்வரும் செய்தியையும் கூறினேன்:

சங்க நூல்களில், நக்கீரர், மதுரைக் கணக்காயனார். மகனார் நக்கீரனார் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளார். அவர் பாண்டிய நாட்டுக்காரர். அவர் திரு. முருகாற்றுப்படையில் கூறியிருக்கும் பெயர்களுள் பெரும்பாலன பாண்டிய நாட்டுப் பெயர்களே. திருவாவினன் குடி (பழநி) மதுரை மாவட்டத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கே 1 கி. மீ. தொலைவிலுள்ளது. அருணகிரிநாதர் போன்றோர் ஓர் ஊராகக் கொண்டிருக்கும் பழமுதிர் சோலை என்பது மதுரைக்கு வடக்கே 20 கி. மீ. தொலைவில் உள்ளது. பழமுதிர் சோலை ஓர் ஊர் இல்லை என்றால் விட்டுவிட லாம். மற்றும் திருச்செந்தூர், தென்பாண்டி நாட்டில் - அதாவது-மதுரை மாவட்டத்தை அடுத்த நெல்லை மாவட்டத்தில் உள்ளது. எனவே, தொலைவிலுள்ள திருப்பதிமலை, திருத்தணிகைமலை முதலியவற்றை அறிந்தோ அல்லது அறியாமையாலோ சொல்ல