பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வில்லை, மற்ற ஊர்களையெல்லாம் 'குன்று தோறு ஆடல்' என்பதனுள் அடக்கி விட்டார் என்று நான் கூறிக் கொண்டிருந்தேன்.

நான் முற்றும் முடிப்பதற்குள், திருமுருகாற்றுப் படையிலுள்ள ஏரகம் மலை நாட்டில் உள்ளது என்று அய்யர் கூறினார். ஏரகம், தஞ்சையை அடுத்த சுவாமி மலை என்றும் மலைநாட்டு ஊர் என்றும் இருவகையாகக் கூறுவதை யான் இளமையிலிருந்தே அறிவேன். மலையாளத்தில் உள்ள ஏரகம், பாண்டிய நாட்டு எல்லைக்கு எத்தனையாவது கல் தொலைவில் உள்ளது என்பதைக் கோபாலய்யர் கூறவில்லை.

மற்றும், கோபாலய்யர், பழமுதிர் சோலை ஓர் ஊர் இல்லை. பழமுதிர் சோலையையுடைய மலைக்கு உரியவன் (கிழவோன்) என்பது பொருள்-என்று கூறினார். சரி, பழமுதிர் சோலை ஓர் ஊர் இல்லை; 'மலை கிழவோன்' என்பது மலைப் பகுதிகட்கு உரியவன் என்னும் பொருள் படுமாயின், திருப்பதி மலையை' விலக்குவது எதற்காகவாம்?

மைவரை உலகம்

இவ்வாறு உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது சங்கத்தில் பாடம் நடத்துபவர்களுள் ஒருவராகிய திரு. பழநி பிள்ளை என்னும் அறிஞர், கோபாலய்யருக்குப் பதில் தரும் வகையில் இலக்கிய ஆதாரம் வேண்டுமா? தொல்காப்பியத்தில்

"மாயோன் மேய காடுறை உலகமும்
சே யோன் மேய மைவரை உலகமும்"—

என்று தொல்காப்பியர் கூறியுள்ளாரே. சேயோனாகிய முருகனுக்கு மலைகள் உரியன என்று கூறியிருக்கும்