பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

நண்பர். "தங்கள் மரபினர் நெற்றியில் கட்டாயம் திரு மண் (நாமம்) அணிந்து கொள்ள வேண்டும்-என்பது ஒரு கொள்கை"-என்று அவர் ஒருமுறை என்னிடம் கூறியுள்ளார். அவர் ஒரு நாள் எங்கோ சென்ற இடத்தில் திருநீறு (விபூதி) கொடுக்கப்பட்டதாகவும் சிறிதளவு திருநீற்றை அவர் நெற்றியில் தடவிக்கொண்டதாகவும், வழியில் அவரைக் கண்ட பெரியார் பரம தயாளம் பிள்ளையவர்கள், என்ன காந்தாளா! மதாந்தரம் போய் விட்டீரா' என்று கேட்டதாகவும்-அவர் என்னிடம் கூறி யுள்ளார். மாதாந்தரம் (மத+ அந்தரம்) என்றால் வேறு மதம் என்று பொருளாம்:

அண்மையில் ஒரு நாள் அறிஞர் காந்தாளனும் யானும் நேர் கண்டு சில செய்திகள் பற்றிப் பேசிக்கொண் டிருந்தோம். அவர் பின்வருமாறு ஒரு கருத்து கூறினார். புஷ்பங்களுள் சிறந்தது ஜாதி மல்லிகை; புருஷர்களுள் சிறந்தவர் விஷ்ணு; நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்- என்னும் கருத்துடைய பாடல் ஒன்று கூறினார். இந்த அடிப்படையில் தான், "புருஷோத்தமன்" என்ற பெயர் திருமாலுக்கு உள்ளது போலும் என்று யான் கூறினேன். பின்னர் யான், பின் வருமாறு அவரிடம் ஒன்று. வினவினேன்:

காந்தாளன் கருத்துரை

கணேசன், விக்னேசுவரர், முருகேசன், குமரேசன், பாடலேசுவரர், காளத்தீசுவரர், வேத புரீசுவரர், திருக்காமேகரர் என்றெல்லாம் ஈசன்--ஈசுரர்- ஈசுவரர் என்று முடியும் பெயர்கள் சைவத்தில் உள்ளவாறு வைணவத்தில் உண்டா?-என்று வினவினேன். அவர் சிறிது. நேரம் ஏதோ எண்ணிப் பார்த்து விட்டு இப்படி வைணவத்தில் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை" என்று. கூறினார், உடனே நான், வேங்கடேசன். வேங்கடேசு-