பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

பிடத்தக்கன. அவையாவன:- திருப்பதி-திருமலை சக்தி பீடமாகும். மதில்களின் மேல் சிங்கப்பதுமைகள் உள்ளன. தலை உச்சியில் சடை உண்டு. பெண்கட்கு உரிய முறையில் முப்பத்தாறு முழ உடை (சேலை) உடுத்தப் படுகிறது-என்பன, ஆச்சாரிய அடிகளார் அருளியனவாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஈசன் - ஈசுவரன்

மற்றும்,

ஈசன், சசுவரன் என்று முடியும் பெயர்களை ஈண்டு விதந்து காண வேண்டும். சிவன் கோயிலை 'ஈசுவரன் கோயில்' என்று கூறுதல் உண்டு. சூடாமணி நிகண்டு- பதினோராம் தொகுதி-முதல் பாடலில் பகவான்களின் (கடவுள்களின்) பெயர்ப் பட்டியல் தரப்படுகிறது; அதாவது:-"பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்"-என்னும் பாடல் பகுதியில் சிவன் "ஈசன்" என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளமை கருதத்தக்கது. இனி, ஈசன்-ஈகவரர் என்று முடியும் சிவன் பெயர்களை ஊர்வாரியாகக் காண்போம்:

திருக்கச்சி அநேக தகோபதம் - அநேக தங்காபதேசுவரர் திருக்கச்சி நெறிக் காரைக்காடு - காரைத் திருநாதேசுரர். திருக்கசிசூர் ஆலக் கோயில் - அமுததியாகேசர். ஔஷத கிரி - மருந்தீசர், இரந்திட்ட ஈசுவரர். திருக்கஞ்சனூர் - அக்கினிசுவரர். திருக்கடம் பந்துறை - கடம்பவன நாதேசுரர். திருக்கடம்பூர்-அமுத கடேசுவரர். திருக்கடவூர்-அமிர்தகடேசர். திருக்கடவூர் மயானம் - பிரமபுரீசன். (இனிவரும் ஊர்ப் பெயர்கட்கு முன்னால் திரு என்பதைச் சேர்த்துப் படிக்கவும்) கடிக்குளம் - கற்பகேசுவரர். கடைமுடி - கடைமுடி நாகேசுவர்ர். கன்டியூர் - வீரட்டேசுவரர். கண்ணார்