26
2. என்றும், 'சரவண பவநிதி' என்னும் பாடலில்,
"திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
குமர சமரபுரி தணிகையும் மிகுமுயர்
சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடிவேலா"
3. என்றும், 'நெச்சுப் பிச்சி' என்னும் பாடலில்,
"கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ! கடவைகள் புடைபடு
கடவட மலையுறை பெருமாளே"-
4. என்றும், 'கோங்கின நீரிளக' என்னும் பாடலில்,
"வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும்வளர்
வேங்கட மாமலையில் உறைவோனே"
5. என்றும், 'சாந்தமில் மோக' என்னும் பாடலில்,
"வேந்த குமார குக சேந்த மயூரவட
வேங்கட மாமலையில் உறைவோனே"
6. என்றும், 'வரி சேர்ந்திடு சேல்' என்னும் பாடலில்,
"தெச மாஞ்சிர ராவணனார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணனார் மரு
மகனாங் குகனே பொழில் சூழ்தரு
திரு வேங்கட மாமலை மேவிய பெருமாளே”
என்றும் உள்ள பாடல் பகுதிகளால், வேங்கட மலை முருகனுக்கு உரியதாக அருணகிரி நாதரால் அறிவிக்கப் பட்டிருப்பதை அறியலாம்.
அன்றியும், வேங்கடம் திருமாலுக்கும் உரியதாக 'இப மாந்தர்' என்னும் திருப்புகழில் அருணகிரிநாதரால் கூறப்பட்டுள்ளது. பாடல் பகுதியாவது :-