பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

 "பொருப்ப தாகியே ஈசனை முடியின் மேற் புனைந்த
திருப்பருப் பதத் தற்புதம் யாவையும் தெரிந்தான்"

"அண்டம் மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே ஒர் குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்"

"பலந்தரு வழிபாட்டினால் பாட்டினால் பரணைக்
கலந்து முத்திசேர் தென்பெருகேயிலையும் கண்டான்"

"அடைய அஞ்சலும் அவள் செருக்கு அழிவுற அழியாகி
கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனம் கண்டான்" (8)

"எம்பிரான் தனி மாநிழல் தன்னில் வீற்றிருக்கும்
கம்பை சூழ்தரு காஞ்சியந் திருநகர் கண்டான்" (9)

"உன்னினர் தங்கட் கெல்லாம்
ஒல்லையின் முத்தி நல்கித்
தன்னிக ரின்றி நிற்கும்
தழல் பெருஞ் சயிலம் கண்டான்" (11),

"துண்ணென வழக்கில் வென்று
சுந்தரன் தனையாட் கொள்ளும்
பெண்ணையம் புனல்சூழ் வெண்ணெய்ப்
பெரும்பதி தனையும் கண்டான்" (12)


"காசியின் விழுமிதான முதுகுன்ற
வரையும் கண்டான்"

"திருநட இயற்கை காட்டும்
தில்லைமு தூரைக் கண்டான்' (14)

இவ்வாறாக முருகன் பல பதிகளையும் கண்டுசென்று கொண்டிருந்தான். அதாவது-கேதாரம், காசி, திருப்-