பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

பருப்பதம், வேங்கடம், திருசைலம், திருவாலங்காடு (வடவனம்), காஞ்சி, திருவண்ணாமலை, திருவெண்ணெய் நல்லூர், முதுகுன்றம், தில்லை (சிதம்பரம்) முதலிய பதிகளைக் கண்டு சென்றானாம். பாடலில் ஒவ்வொரு பதியையும் பற்றிப் பின்வருமாறு சிறு விளக்கம் தரப்பெற்றுள்ளது.

கேதாரம் : இமையக்கன்னி பூசனை புரிந்த இடம்.

காசி : மறைமுனி எடுத்த....காசி

திருப்பருப்பதம் : ஈசனை முடிமேல் புனைந்தது,

திருசைலம் (தென்கயிலை) : வழிபாட்டினால் முத்தி சேர்விப்பது . -

திருவாலங்காடு : சிவன் நடனத்தால் காளியை வென்ற இடம்.

காஞ்சி : சிவன் மாமர நிழலில் வீற்றிருக்கும் இடம்.

திருவண்ணாமலை : நினைப்பவர்க்கு வீடு பேறளிப்பது.

திருவெண்ணெய் கல்லூர் : சுந்தரரை ஆட்கொண்ட இடம்.

முதுகுன்றம் (விருத்தாசலம்) : காசியினும் சிறந்தது.

தில்லை : சிவன் நடம் புரிவது.

இவ்வாறு இவ்வூர்களைச் சிவனோடு தொடர்பு படுத்திக் கூறிய கச்சியப்பர் வேங்கடத்தைப் பற்றிக் கூறியிருப்பது வேறு விதமாயுள்ளது. அதாவது:- முருகன் தன் தாயிடம் முரணிக் கொண்டு, பாதாளப் பாதை வழியாக வந்து ஒரு குகை வழியே மேலே ஏறித் தங்கிய