பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

சேர்ந்து இருப்பதால் 36 முழம். இந்த 36 முழத்தை நெய்வதற்கு அங்கே தனியாகவும் நெசவுக்காரர்கள் இருக்கிறார்கள்" இப்படி ஆச்சாரிய சுவாமிகள் சொன்னார்கள்.

சிவபெருமானும் திருமாலும் சேர்ந்து ஒன்றாக இருக்கிற உருவம் என்று திருவேங்கட முடையானை ஆழ்வார் பாடியிருக்கிறார். வேங்கட சுப்பிரமணியன் என்ற பேரைப் பல பேர் வைத்துக் கொள்வார்கள். அதுவும் திருமாலுடன் சுப்பிரமணியன் இருப்பதைத் தெரிந்து கொள்வதற்குச் சான்று. சிலப்பதிகாரத்தில் வேங்கடத்தில் திருமால் இருந்ததாகச் செய்தி வருகிறது. ஆகவே, அங்கே திருமால் கோவிலும் முருகன் கோவிலும் தனித்தனியாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். அங்கே உள்ள திருக்குளத்கின் பெயர் கவாமி புஷ்கரிணி என்பது. சுவாமி என்றால் முருகன். முருகன் அந்தக் குளத்தை உண்டாக்கித் திருமாலுக்குப் பூஜை செய்தான் என்று வைணவப் புராணம் சொல்கிறது. முருகன் எழுந்தருளியுள்ள கோவில் ஆகையால் அந்தத் திருக்குளத்திற்கு அந்தப் பெயர் வந்தது என்றும் சொல்ல லாம்.

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்.......... ... அம்பிகை கோபித்துக் கொண்டதனால் முருகன் தானும் கோபம் கொண்டு, 'நான் இங்கே இருக்க மாட்டேன்; வேறு ஒரு மலைக்குப் போகிறேன்’ என்று பாதாளத்தின் வழியே வந்து வேங்கட மலையின் குகை வழியே வெளிப்பட்டானாம் ...... அப்போது அவன் தங்கின இடம் திருவேங்கடம். 'முன்பு தான் தங்கிய வேங்கட கிரியைப் பார்த்தான்' என்று கந்த புராணக்காரர் சொல்கிறார்......