பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


திருவேங்கடத்தில் ஓர் அருவி இருக்கிறது. அதற்குக் குமாரதாரை என்று பெயர். குமாரன் என்பது முருகன் பெயர்தானே? திருப்பதியில் வெள்ளிக்கிழமை தோறும் வில்வ அருச்சனை நடக்கிறது. திருமால் கோவிலில் வில்வ அருச்சனை நடப்பது அருமை. மேலும் அங்கே சிறப்பான அபிஷேகங்கள் பல உண்டு. இத்தகையவற்றைக் காணும் போது முருகப் பெருமானின் சம்பந்தமும் அங்கே இருக்கிறது என்று தெரிகிறது.

அது மாத்திரம் அன்று. எல்லா மலைகளுக்கும் முருகன் தெய்வம். மலைகளும் மலைகள் சார்ந்த இடமும் குறிஞ்சி. குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன்தான். மலையில் மூர்த்தி இருந்தாலும் இல்லா விட்டாலும், வேறு மூர்த்தி இருந்தாலும் மலைக்குத் தலைவனாக அவன் இருக்கிறான்'- என்பது, கந்தவேள் கதையமுதம்" என்னும் நூலில் உயர் இரு கி. வா. ஜகந்நாதன் எழுதியிருக்கும் பகுதியாகும்.

யான் இந்தச் சிறுநூலை எழுதி முடித்த ஒரு திங்களுக்குப் பிறகு, கி. வா. ஜ.வின் கந்தவேள் கதையமுதம் எனக்குக் கிடைத்தது. ஒரு நாள் முற்பகல் 11 மணிக்கு இது கிடைத்தது. படித்துப் பார்த்தேன். உடனே 11-30 மணிக்கு உயர்திரு டாக்டர் ஆர். கோதண்டராமன் வந்தார். நான் அவரிடம், 'இதோ பாருங்கள்' என்று எனது கையெழுத்துப் படியைக் காட்டி, 'நான் எழுதியி ருப்பவற்றைக் கி. வா. ஜ. வும் எழுதியிருக்கிறார். இதோ உள்ளாரே இவர்தான் கடலூரிலிருந்து இந்நூலை இப்போது கொண்டு வந்து கொடுத்தார்' - என்று கடலூரிலிருந்து வந்தவரையும் காண்பித்தேன். இதன் பின்பே, கி. வா. ஜ. எழுதியதாக மேலே தரப்பட்டுள்ள பகுதியை இங்கே சேர்த்துள்ளேன். எனக்குத் தக்க சான்று இது. கி. வா. ஜ. சில இடங்களில் அப்படியும்