பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

இப்படியுமாகச் சொல்லியிருப்பினும், நடுமையக்கருத்து வேங்கடம் முருகன் மலையாயிருந்தது, என்பதே.

சொந்தக் கவி பண்ணு

பிறகு எண்ணிப் பார்த்தேன். ஏன், நாம் இப்போது ஒருமுறை திருவேங்கடம் சென்று நேரில் ஆய்ந்து வருவோமே-என்று முடிவு செய்தேன். சோறு பொங்கித் தின்னு-சொந்தக் கவி பண்ணு' என்பது ஒரு முதுமொழி. எண்ணியவாறே, உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் மறுநாள் விடியல் 5 மணிக்கே வீட்டை விட்டுத் திருவேங்கடத்திற்குப் புறப்பட்டு விட்டேன். திருப்பதி போய்ச் சேர்ந்தேன். திருமலைக்குப் போகும் திருக்கோயில் பேருந்தில் ஏறி ஆறு மலைகளை எண்ணிக் கொண்டே சென்று ஏழாவது மலையை-ஏழுமலையானை அடைந்தேன், ஆறு மலைகளைக் கடந்ததும். ஏழாவது பகுதி மிகவும் தாழ்ந்து தாழ்ந்து அமைந்தி ருந்தது. படிகளில் கீழே இறங்கி இறங்கிக் கோயில் பகுதியை அடைந்தேன். அந்தப் பகுதி பரந்து இருந்ததனால்தான் அங்கே கோயில் எழுப்ப முடிந்திருக்கிறது.

கோயில் மலைகளின் நடுவில் பள்ளமான பகுதியில் இருப்பதனால்தான், கந்தபுராண ஆசிரியரும் கந்த புராண வெண்பா ஆசிரியரும் அருணகிரிநாதரும், முருகன் பாதாள வழியாக வந்து குகை வழியாக மேலே வந்தான் என்று கூறினார்களோ என்று எண்ணிப் பார்த் தேன். களப்பணி தொடங்கினேன்:

களப் பணி

மதில்மேல் சிங்கப் பதுமைகளைக் கண்டேன். உடை 18 முழம் என்றும் 36 முழம் என்றும் இரண்டு விதமாகவும் உடுத்தப்படுவதுண்டு என்பதையும் கேட்டுத்