பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தெரிந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாதலால் காலையில் வில்வ அருச்சனை நடைபெற்றது என்பதையும் கோயில் பூசனையாளர் (பட்டாசோரியார்) ஒருவர் கூறக் கேட்டறிந்தேன். மார்கழித் திங்களில் 30 நாட்களும் வில்வ அருச்சனை நடைபெறும் என்று அவரே கூறினார். பூசனையாளர் இருவரை ஒரே இடத்தில் நேர்கண்டு, பெருமாள் சிலையின் கைகளில் சங்கு சக்கரம் இயற்கையாக இல்லை; வெள்ளியாலும் பொன்னாலும் செயற்கையாகச் செய்து பதித்திருப் பதாகச் சொல்கிறார்களே—உண்மைதானா?" என்று வினவினேன். உண்மைதான் என்று ஒருவர் கூறினார். மற்றொருவர், பெருமாள் சிலையின் காதுகளின் அருகே சங்கு சக்கரம் இருப்பதாகக் கூறினார் செயற்கையே என்று கி. வா. ஜ. எழுதியிருப்பதையும், பாண்டுரங்கமும் காந்தாளனும் இராமாநுசரே சங்கு சக்கரம் அமைத்ததாகக் கூறப்படுகிறது என்று கூறியதையும் எண்ணி ஒப்பிட்டுப் பார்த்தேன்.

கண்டேன் காவடி

அடுத்துக் காவடியைப் பற்றிச் சிலரைக் கேட்டேன். காவடி வருவதுண்டு என்ற பதில் கிடைத்தது. பின்னர் ஓய்வுக்காகக் கோயிலின் அண்மையிலுள்ள ஒரு விகுதியில் தங்கியிருந்தேன். ஒரு மணி நேரக் காலம் கழித்து எங்கோ ஒரு மூலையில் 'அரோகரா’ ஒலி கேட்டது. எழுந்து ஓடினேன். பன்னிருவர் காவடி சுமந்திருந்தனர். அவர்களைச் சேர்ந்தவர்கள் சுற்றி ஒரு குழுவாக இருந்தனர். அனைவரின் நெற்றியிலும் திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் திகழ்ந்தன. முருகையா-முருகையா என்று முடிவதாக உள்ள பாடலும் முருகன் மேல் இன்னும் ஏதோதோ பாடல்களும் பாடிக் கொண்டும் 'அரோகரா’ போட்டு ஆடிக்கொண்டு