பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


அலர்மேல் மங்கைபுரக் கோவிலில் ஒரு வியப்பான அமைப்பு உள்ளது! மற்ற கோயில்களில், கோபுரத்திற்கும் கொடிக் கம்பத்திற்கும் நேராக உள்ளே உள்ள கருவறையில் அக்கோயிலின் முதன்மைத் தெய்வத்தின் சிலை இருக்கும். ஆனால், அங்கே, கோபுர வாயிலுக்கு நேரே உள்ள முதன்மைக் கருவறையில், கல்லால் ஆன கண்ணன் சிலையும் உலோகத்தால் ஆன பலராமன் முதலியோர் சிலைகளும் உள்ளன. அந்தப் பகுதியின் வலப்புறத்தில் சீநிவாசப் பெருமாள் கோயிலும் இடப்புறத்தில் அலர்மேல் மங்கைத் தாயார் கோயிலும் உள்ளன. அலர்மேல் மங்கைக் கோயிலில் இருந்த பூசனையாளரிடம், இங்கே உள்ள வரலாறு என்ன?-என்று யான் வினவினேன். அதற்கு அவர், இந்த அம்மா திருமலைமேல் உள்ள பெருமாளின் மனைவி; அவர்மேல் கோபித்துக் கொண்டு இங்கே வந்து விட்டார்கள்-என்று கூறினார். ஏதோ அகம்படையான்-பெண்டாட்டி கோபம்-நாம் அதைக் கிளறுவானேன்!

பின்னர் நான், அவரை நோக்கி, இங்கே சீநிவாசப் பெருமாள் கோயில் இருக்கிறதே-இவருடைய மனைவி இந்த அம்மா என்று சொல்லக் கூடாதா?-என்று வினவினேன். அதற்கு அவர், இல்லையில்லை-திருமலைப் பெருமாளின் மனைவிதான் இந்த அம்மா - என்றார். அங்ஙனமெனில், இங்கே உள்ள சீநிவாசப் பெருமாளும் மலைமேல் உள்ள பெருமாளும் வெவ்வேறானவர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், இருவரும் ஒருவரே என்று ஏதேதோ கூறி முழுகி முழுகி எழுந்து தத்தளித்தார். அதோடு நிறுத்திக் கொண்டேன்.

இது தொடர்பாக - உறுதியாக இல்லை - ஒரு தோற்றமாக எண்ண இடந்தந்த கருத்தாவது:—கோபுர வாயிலுக்கு நேரே உள்ள நடுமையக் கருவறையில்