பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43


போர் முடிந்தபின் தொண்டைமான் சங்கு சக்கரங்களைப் பகவானிடம் கொண்டு வந்து சமர்ப்பித்து, 'பகவானே! அடியவன்பால் நின் கருனைத் திறத்தை உலகோர் அறியும் படியாக நீ எனக்குச் சக்கரங்களை அளித்ததை எந்நாளும் மாந்தர் நினைவு கொள்ளும்படியாக இவை மாந்தரின் ஊனக் கண்களுச்குப் புலப்படாதவாறு சேவை தர வேண்டும்’ என்று வேண்டினான். பகவானும் அவன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்." (பக்கம்-61)

முருகனை மாற்றியமைத்த திருமால் சிலையின் கைகளில் சங்கு சக்கரம் இல்லாத குறையை மறைக்க, மாந்தரின் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்யப்பட்டதாகக் கூறும் இந்தக் கதை பொய்யாக இட்டுக்கட்டப் பட்டது என்பது நடுவு நிலைமையாளர்க்கு நன்கு புலனாகலாம். இஃதன்றி, நூலின் 64 ஆம் பக்கத்தில் உள்ள மற்றும் ஒரு செய்தி வருமாறு:

"இராமாநுஜர் வேண்டப் பகவான் சங்கு சக்கரம் தரித்தது”

"திருமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் தொண்டைமான் வேண்டுகோளுக் கிணங்கத் தமது திருக்கரங்கவில் சங்கு சக்கரம் இல்லாமலே காட்சியளித்து வந்தார். அதைக் கண்டு ஜனங்கள், அக்கடவுள் சிவபெருமான் என்றும் முருகன் என்றும் பலவாறு கூறி முரண்பட்ட கருத்துக்களால் பகைமை பூண்டு ஒழுகுவாராயினர். அதை அறிந்த இராமாநுஜர் அக்கருத்து வேறுபாடுகளைப் போக்க நினைத்தார்.

இந்த இராமநுஜர் யாரெனில், ஆதியுகத்தில் ஆதி சேஷனாகவும் இரண்டாவது யுகத்தில் லட்சுமணனாக-